|
உர
உரியான்’
என்று 1படி எடுத்துக் காட்டலாமே.
2“‘வடிவும்’ என்பதே!” என்று ஈடுபட்டவராய் இருப்பர். பாங்கு தோன்றும் பட்டும்-திரு
அரை பூத்தாற்போலே அங்குத்தைக்குப் பாங்காத் தோற்றுகிற திருப்பீதாம்பரமும், நாணும் - விடுநாணும்,
பாவியேன் பக்கத்தவே-அநுபவிக்கத் தருதல், உருவெளிப்பாடாய்த் தோன்றாதே ஒழிதல் செய்யாதபடியான
மஹா பாவத்தைச் செய்தேன். 3அருகே நின்று பிகாசித்துக்கொண்டு நின்றன; அநுபவ
யோக்கியமாகப் பெறுகின்றன இல்லை. 4அணைக்கத் தருதல், அகல நிற்றல் செய்கின்றன
இல்லை.
(4)
491
பக்கம் நோக்கி நிற்கும்
நையும்என்று அன்னையரும் முனிதிர்
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி
நம்பியைநான் கண்டபின்
தொக்க சோதித் தொண்டைவாயும்
நீண்ட புருவங்களும்
தக்க தாமரைக்கண்ணும்
பாவியேன் ஆவியின் மேலனவே.
பொ-ரை :- அவன் வருவதற்குரிய பக்கத்தையே நோக்கிக்
கொண்டு நிற்பாள், வருந்துவாள் என்று அன்னையராகிய நீங்களும் முனியாநின்றீர்கள்; தக்க கீர்த்தி
நிறைந்த திருக்குறுங்குடியிலேயுள்ள நம்பியை நான் பார்த்தபிறகு, கோவைக்கனி போன்ற பிரகாசம்
திரண்டிருக்கிற திரு அதரமும் நீண்ட புருவங்களும் தக்கனவான தாமரை போன்ற திருக்கண்களும் பாவியேனாகிய
என்னுடைய உயிரிடத்திலே தங்கி நலியாநின்றன.
வி-கு :-
ஆவியின்மேலன: என்பதில், மேல் என்பது, ஏழாம் வேற்றுமையுருபு. ஆவியினிடத்தன என்பது
பொருள்.
___________________________________________________
1. ‘படி’ என்றது, சிலேடை:
திருஷ்டாந்தம் என்றும், திருமேனி என்றும் பொருள்.
2. ‘வடிவும்’ என்று தொடங்கும்
வாக்கியத்திற்குக் கருத்து, இப்பாசுரத்திலே
முன்னும் பின்னும் கூறிய ஆபரணங்களின் மத்தியில்
வடிவையும் ஆபரண
கோடியிலே சேர்த்து அருளிச்செய்வதே என்பது. ‘ஈடுபட்டவராய் இருப்பர்’
என்றது,
நஞ்சீயரை.
3. “பக்கத்தவே” என்றதற்கு,
பாவம் அருளிச்செய்கிறார் ’அருகே நின்று’ என்று
தொடங்கி.
4. “பக்கத்தவே”
என்ற ஏகாரத்தின் பொருளை அருளிச்செய்கிறார் ‘அணைக்கத்
தருதல்’ என்று தொடங்கி.
|