|
492
492
மேலும் வன்பழி நங்குடிக்கு
இவள்என்று அன்னை காணக்கொடாள்
சோலை சூழ்தண் திருக்குறுங்குடி
நம்பியை நான் கண்டபின்
கோல நீள்கொடி மூக்கும்
தாமரைக் கண்ணும் கனிவாயும்
நீல மேனியும் நான்கு
தோளும் என்நெஞ்சம் நிறைந்தனவே.
பொ-ரை :- இவள், மேலும் நம் குடிக்குக் கொடிய பழியை
உண்டாக்குமவள் என்று சொல்லிக்கொண்டு தாயானவள் நம்பியைக் காணுதற்கு இடம் தருகின்றிலள்,
சோலைகள் சூழ்ந்த குளிர்ந்த திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின், அழகோடு மிகவும் நீண்டிருக்கின்ற
திருமூக்கும் தாமரை போன்ற திருக்கண்களும் கோவைக்கனி போன்ற திருவாயும் கரிய திருமேனியும் நான்கு
திருத்தோள்களும் என் நெஞ்சத்தினிடத்தில் நிறைந்து விட்டன என்கிறாள்.
வி-கு :-
நீள்கொடி : ஒருபொருட்பன்மொழி.
ஈடு :- ஆறாம்
பாட்டு. 1நம்பியுடைய திவ்விய அவயவ சோபைகள் என்நெஞ்சு நிறையப் புகுந்து நலியாநின்றன
என்கிறாள்.
மேலும் நம் குடிக்கு
வன் பழி இவள் என்று-இப்போது சிலர் நான்கு வார்த்தைகள் சொல்லிவிடுனக அன்றிக்கே, மேலும்
இக்குடிக்கு உருவ நிலைநின்ற பழியை விளைக்குமவள் இவள் என்று. அன்னை காணக் கொடாள்-2தன்னோடு
ஒத்தவர்கள் சொல்லுகை அன்றிக்கே, அடியிலே என்னைப் பெறுகைக்கு நோன்பு நோற்ற இவளும் இப்படிச்
சொல்லாநின்றாள். சோலை சூழ் தண் திருக்குறுங்குடி நம்பியை - சிரமஹரமான சோலைகள் சூழ்ந்த
_____________________________________________________
1. பின் இரண்டு அடிகளைத்
திருவுள்ளம்பற்றி அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. மேல் எல்லாம் “அன்னை
மீர்காள்” என்று பன்மை வாய்பாட்டால்
சொல்லி, இங்கு, “அன்னை” என்று ஒருமை வாய்பாட்டால்
அருளிச்செய்வதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘தன்னோடு ஒத்தவர்கள்’
என்று தொடங்கி.
‘தன்னோடு ஒத்தவர்கள்’ என்றதில் ‘தான்’ என்றது,
நற்றாயை. ‘ஒத்தவர்கள்’ என்றது, செவிலி
முதலிய ஏனையோரை.
|