|
New Page 1
பொ-ரை :-
இவள் செய்கின்ற காரியம் நம் குடிக்கு நிறைந்த கொடிய பழியைத் தருவதாகும் என்று தாயானவள்
நம்பியை நான் காண்பதற்கு விடுகின்றிலள்: சிறந்த கீர்த்தியையுடைய திருக்குறுங்குடி நம்பியை நான்
கண்டபின், நிறைந்த பிரகாசத்தின் கூட்டத்தாலே சூழப்பட்ட நீண்ட அழகிய திருமேனியோடும் என்
மனத்துக்குள்ளே நிறைந்து நின்றுவிட்டான்; திருச்சக்கரமும் அழகிய கையிலே இருக்கின்றது.
வி-கு :-
சூழ்ந்த மேனி என்க நின்றொழிந்தான்: ஒருசொல்.
ஈடு :- ஏழாம்
பாட்டு. 1நம்பியுடைய திருமேனியில் அழகு வெள்ளம் என் நெஞ்சிலே வேர் வீழ்ந்தது
என்கிறாள்.
நிறைந்த வன்பழிநம்
குடிக்கு இவள் என்று அன்னை காணக்கொடாள் - 2ஆண்டாள், ஒருநாள் பட்டரையும் சீராமப்பிள்ளையையும்
காட்டி, ‘இவர்கள் விவாகத்தைச் செய்வதற்குரிய பருவத்தை அடைந்தார்கள், பேசாதே இருக்கிறது
என்?’ என்ன, ‘ஆகில், நாளைப் பெருமாள் பாடே போனவாறே வரக்காட்டு’ என்ன, அவர்களையும் கொண்டு
திருமுன்பே நிற்கச் செய்தே, பெருமாள் அருளப்பாடிட்டு, ‘ஒன்று சொல்வாய் போலே இருந்தாயே!’
என்று திருவுள்ளமாக, “இவர்கள் விவாகத்தைச் செய்வதற்குரிய பருவத்தினர் ஆனார்கள் என்று
சொல்லா நின்றார்கள்” என்ன, ‘நாமே ஒத்ததான இடத்தில் சம்பந்தம் செய்து தருகிறோம்’ என்று
அருளிச்செய்ய, பிற்றை நாள் மன்னியைக் கொடுவந்து நீர் வார்த்தார்கள்.
______________________________________________________
1. பின் இரண்டு அடிகளைக்
கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
“என்னுள்ளே நின்றொழிந்தான்” என்றதனை நோக்கி
‘என் நெஞ்சிலே வேர்
விழுந்தது’ என்கிறார்.
2. இங்கே
பழியாகச் சொல்லுகிறது, ஸ்வாபதேசத்திலே, இவ்வுலக இன்பம்
அவ்வுலக இன்பம் என்னும் வேறுபாடு
அற இரண்டினுக்கும் அவனே
கடவன் என்று அவன் கையைப் பார்க்குமது ஒழிய, அவற்றிற்காகத் தான்
செய்யும்
முயற்சியை என்று கூறத் திருவுள்ளம் பற்றி, ‘தன் முயற்சி பழி’
என்னுமதற்கு, ஐதிஹ்யம்
காட்டுகிறார் ‘ஆண்டாள்’ என்று தொடங்கி.
ஆண்டாள்-கூரத்தாழ்வானுடைய திருத்தேவியார். இதனால்,
இவ்வுலக
இன்பத்திற்காகவுங்கூட ஈச்வரனை ஒழியத் தானாகவே ஒரு முயற்சியைச்
செய்தல் ஸ்வரூபத்திற்கு
விரோதம் என்று தோற்றுகையாலே, அவ்வுலக
இன்பத்திற்குத் தான் முயற்சி செய்தல் ஸ்வரூபத்திற்கு
விரோதமாகின்ற
காரணத்தால் தாழ்வாம் என்பது சொல்லாமலே போதரும். மன்னியை
-கன்னியை.
|