|
ஆக
ஆக, ‘அத்தலையாலே வருமது ஒழிய, தாம்தாம் ஒன்றை
ஆசைப்படுகையும் கூடப் பழி’ என்று இருக்குங் குடி காணும். 1“அதபாதக பீத: த்வம் -
2‘தருமபுத்திரன் ஓர் ஆபாசமான பொய்யினைச் சொல்லி, அதற்கு நரக தரிசனம் செய்தான்’
என்பது பிரசித்தமே அன்றோ. அடுத்து அடுத்து ராஜசூயங்களைச் செய்தானித்தனை போக்கி ‘விலக்கிய
காரியங்களைச் செய்தான்’ என்று பிரமாணப் பிரசித்தி இல்லை. “அதபாதக பீத: த்வம் -
3மேலே செய்து போந்தவை பாதகம் என்று தோற்றி அச்சத்தை அடைந்தவனானாயாகில்,
4அகங்கார மமகாரங்களை மூலமாகக் கொண்ட கிரியாகலாபமடைய, ‘கிருஷ்ணனே நம் கார்யத்துக்
கடவன்’ என்று அறிந்த பின்பு பாதகத்திற்கு ஒத்தனவாய்த் தோற்றின ஆயிற்று. வி முக்தாந்ய சமாரம்ப:
சர்வபாவேன நாராயண பர: பவ- 5உப்பைத் தொட்டுப் புளியைத்தொட்டு நீ நின்று
____________________________________________________
1. இதனால் பிரபந்நனுக்கு இவ்வுலக இன்பத்தின்பொருட்டுச்
செய்கின்ற
முயற்சியும் பழி என்ற போதே, தன் முயற்சியால் வருகின்ற வேறு
உபாயங்கள் பழியாம்
என்னுமதனைத் திருவுளத்தேகொண்டு, அதற்குப்
பிரமாணம் காட்டுகிறார் ‘அதபாதக’ என்று தொடங்கி.
“அதபாதகபீத: த்வம் ஸர்வபாவேந பாரத
விமுக்தாந்ய ஸமாரம்ப: நாராயண பரோபவ”
என்பது, பாரதம் விஷ்ணுதர்மம். தர்மபுத்திரனைப்
பார்த்துத் தரும தேவதை
கூறியது.
2. “பாதக” சப்தம், நிஷித்த அனுஷ்டானத்தைச்
சொல்லுமது ஒழிய, வேறு
உபாயங்களைச் சொல்லுமாறு யாங்ஙனம்? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார்
‘தருமபுத்திரன்’ என்று தொடங்கி. என்றது, ஒளசித்யத்தால்
இவ்விடத்தில் “பாதக” சப்தம் உபாயாந்தரங்களைக்
காட்டுகிறது என்றபடி.
3. ‘மேலே செய்து போந்தவை’ என்றது, ராஜசூயம்
முதலானவற்றை.
4. மேலே செய்து போந்த இராஜசூயம் முதலானவைகள்,
பாதக சமமான
காரியங்களாகத் தோற்றுகைக்குக் காரணம் யாது? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார்
‘அகங்காரம்’ என்று தொடங்கி. கிரியா கலாபம்
-செயல்களின் கூட்டம்; கருமங்களின் கூட்டம்.
5. “வி” என்ற
உபசர்க்கத்தின் பொருளை அருளிச்செய்கிறார் ‘உப்பைத்
தொட்டு’ என்று தொடங்கி. என்றது,
“வி” என்ற உபசர்க்கமானது,
வாசனையோடு துறத்தலைக் கூறுகிறது என்றபடி. “நாராயண” சப்தார்த்தம்,
‘உடையவனே’ என்பது. இது, வேற்றுமைத் தொகையின் பொருள்.
|