முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
23

1ப

1பிறந்த ஞானலாபத்தை நினைத்து ‘நண்ணியும்’ என்கிறார். சரீர சம்பந்தத்தோடே இருக்கிற இருப்பை நினைத்து ‘நண்ணகில்லேன்’ என்கிறார். நடுவே ஓர் உடம்பில் இட்டு - 2ஆத்மாவுக்குச் சரீரத்தின் சேர்க்கை அநாதியாக இருக்கச் செய்தேயும், அது ஒளபாதிகமாய்த் தோற்றுகையாலே ‘நடுவே ஓர் உடம்பு’ என்கிறார். 2சலகில் கிடந்த முத்துக்கும் பொன்னுக்கும் அழுக்கு ஏறின நாள் அறிவார் இல்லை, பின்பு கழியக் காண்கையாலே ‘இது வந்தேறி’ என்று தோற்றாநின்றதே அன்றோ? அப்படியே, பகவானை அடைவதனாலே கழியக் காண்கையாலே ‘இது வந்தேறி’ என்று தோற்றுமே அன்றோ? 4இராஜ புத்திரன் வழியிலே போகாநிற்கச் செய்தே வேடர் கையிலே அகப்பட்டுத் தன்னை வேடனாகவே எண்ணுமாறு போலே இருப்பது ஒன்றே அன்றோ, சேதனன் தேகத்திலே அஹம் புத்தி பண்ணி “நான் தேவன்” என்று இருக்கும் இருப்பு?

    திண்ணம் அழுந்தக் கட்டி - அவித்தை முதலியவைகளாலே உறுதியாகக் கட்டி. பல செய் வினை வன் கயிற்றால் - தாம் பலவாய்ச் செய்யப்பட்டிருந்துள்ள வினைகளாகிற வலிய கயிறுகளால் உறுதியாகக் கட்டி. புண்ணை மறைய வரிந்து - தோலை மேவிக் 5கைப்பாணி இட்டு மெழுக்கு வாசியிலே மயங்கும்படி பண்ணின இத்தனை

_____________________________________________________

1. ‘பிறந்த ஞான லாபம்’ என்றது, மானச அநுபவத்தை, ‘சரீர
  சம்பந்தத்தோடே’ என்றது, “நடுவே ஓர் உடம்பிலிட்டு” என்றதனைப் பற்றி,

2. ‘சரீரத்தின் சேர்க்கை அநாதியாக இருக்க, “நடுவே” என்பான் என்?’
  என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘ஆத்மாவுக்கு’ என்று தொடங்கி.
  ஒளபாதிகம் - உபாதியடியாக வந்தது; உபாதி-காரணம்.

3. ‘அநாதியான இதனை ‘ஒளபாதிகம்’ என்று அறியலாம்படி எங்ஙனம்?’
  என்ன, ‘சலகில்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
  சலகு - முத்துச்சிப்பி.

4. ‘வந்தேறியாகில் ஸ்வாபாவிகமாய்த் தோற்றும்படி யாங்ஙனம்?’ என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘இராஜபுத்திரன்’ என்று தொடங்கி.

5. கைப்பாணி - மணியாசகம். மெழுக்கு வாசி - பூச்சு வாசி.