முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
233

1ஆக

    1ஆக, ‘இது பழி’ என்று பரிஹரிக்கப் பார்க்கிற இடம், சரமஸ்லோகத்தில் முன்பாகத்தில் நிஷ்கர்ஷம் இருந்தபடி. ‘இது பழி’ என்று மீளாது ஒழிகிற இடம், சரமஸ்லோகத்தில் பின்பாகத்தில் நிஷ்கர்ஷம் இருந்தபடி.

    சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை - தகுதியாயிருந்துள்ள கீர்த்தியையுடைய திருக்குறுங்குடி நம்பியை. நான் கண்டபின் - அக்கீர்த்தியைப் போன்று அங்குத்தைக்குச் சிறந்த நான் கண்டபின். 2“யாவரொருவருக்கு அந்தச் சானகி மனைவியாக இருக்கிறாளோ அந்த இராமபிரானுடைய பராக்கிரமம் அளவிட்டு அறியக்கூடாததாய் இருக்கிறது அன்றோ” என்கிறபடியே, அவனுக்கு அக்கீர்த்தியைப் போன்று, தன்னுடைய சம்பந்தமும் ஏற்றமாம்படி இருக்குமவளே அன்றோ. நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும்-கங்கையின் அலைகளின் நடுவே வசிப்பாரைப் போலே ஒளிகளாகிய அலைகளின் நடுவே ஆயிற்று இருப்பது. 3ஒளிகளின் நடுவே வடிவு ஊகிக்கப்படுவதாயாயிற்று இருப்பது. அவ்வடிவுதான் எவ்வளவு போரும் என்னில், அளவிட்டு அறிதற்கு அரியதாய்ச் சிலாக்கியமாய் இருக்கும்.

    நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் - 4ஒருநாள், சீயர் கோயிலுக்கு எழுந்தருளாநிற்க, வழியிலே

__________________________________________________

1. ஆக, ‘சரமஸ்லோகத்துக்கு மேலுள்ளவற்றை’ என்றது முதலாக, ‘அன்றோ
  இது’ என்றது முடிய, கூறிய அர்த்த விசேடங்களைச் சுருக்கமாகக் காட்டா
  நின்றுகொண்டு முடித்துக் காட்டுகிறார் “ஆக, ’இது பழி’ என்று” என்று
  தொடங்கி.

2. அந்தக் கீர்த்தியைப் போன்று, இவளும் அவனுக்கு அதிசயத்தை
  உண்டாக்கக் கூடியவளோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘யாவரொருவருக்கு’ என்று தொடங்கி. இது, ஸ்ரீ ராமா. ஆரண்ய. 37 : 18.
  இராவணனைப் பார்த்து மாரீசன் கூறியது. இந்தச் சுலோகத்தை 198-ஆம்
  பக்கம் பார்க்கவும்.

3. ஆயின், வடிவை அறியும்படி என்? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘ஒளிகளின்’ என்று தொடங்கி.

4. “நீண்ட பொன்மேனியொடும் நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான்”
   என்று விக்கிரஹ வியாப்திக்கு ஐதிஹ்யம் அருளிச்செய்கிறார் ‘ஒரு நாள்’
   என்று தொடங்கி. சீயர் - நஞ்சீயர். இவர் பட்டருடைய மாணாக்கர்;
   ஒன்பதினாயிரப்படி வியாக்கியானத்தை அருளிச்செய்தவர். பிள்ளான் -
   திருக்குருகைப்பிரான் பிள்ளான்; இவர் எம்பெருமானாருடைய மாணாக்கர்;
   ஆறாயிரப்படி வியாக்கியானத்தை அருளிச்செய்தவர்.