|
ப
பிள்ளானைக்
கண்டு, ‘ஈச்வரனுக்கு ஸ்வரூப வியாப்தியேயோ உள்ளது,
விக்கிரஹ வியாப்தியும் உண்டோ?’ என்று கேட்க, ‘சர்வவிஷயமாக ஸ்வரூப வியாப்தியே உள்ளது;
உபாசக விஷயத்தில், அவர்கள் பக்கல் அநுக்ரஹத்தாலே, அவர்கள் பற்றுக்கோடாகப் பாவித்த
விக்கிரஹத்தோடே எழுந்தருளியிருக்கும்; இனி, 1ஸ்வரூப வியாப்திக்குப் பிரமாணம்
கண்ட இடம் சாமான்ய விஷயமாகிறது, விக்கிரஹ வியாப்திக்குப் பிரமாணம் கண்ட இடம் விசேஷ விஷயமாகிறது’
என்று பணித்தானாம். நேமி அம் கை உளதே-2வடிவழகு எல்லாம் ஒரு தட்டும், கையுந் திருவாழியுமான
அழகு ஒரு தட்டுமாயாயிற்று இருப்பது. என்றது, அவன் கையில் திருவாழி பிடித்திலனாகில் நான் பழி
பரிஹரித்து மீளேனோ? அவன் கையில் திருவாழி இருக்க, என்னாலே பழிக்கு அஞ்சி மீளப்போமோ?
என்றபடி. உங்கள் ஹிதவசனங்களைக் கேட்கைக்கு உள்ளே இடம் இல்லாதபடி நிறைந்து நின்றான் என்பாள்,
நிறைந்து என்உள் நின்றொழிந்தான்’ என்கிறாள். இனி, போக்கிடம் இல்லையாம்படி
அவன் வந்து உள்ளே நிற்க, எனக்கு ஒரு போக்கிடம் உண்டோ என்பாள், ‘நின்றொழிந்தான்’
என்கிறாள் என்னுதல். அவனை என் மனத்தினின்றும் புறப்படச் சொல்லமாட்டீர்களோ நான் என்பழி
நீக்குவதற்கு. வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும்படியான கையிலே திருவாழியுமானால் மீளப்போமோ,
3அவனுடைய நிறைவினைக் குறைக்கவோ, என்பழி நிறைவினைக் குறைக்கவோ.
(7)
_____________________________________________________
1. ஸ்வரூப வியாப்திக்குப்
பிரமாணம்:
“யச்ச கிஞ்சித் ஜகத்யஸ்மின்
த்ருஸ்யதே ஸ்ரூயதேபி வா
அந்தர் பஹிஸ்ச தத்சர்வம்
வியாப்ய நாராயண : ஸ்தித:”
என்பது, இது, தைத்திரீய நாராயண
உபநிடதம். 11 : 8.
விக்கிரஹ வியாப்திக்குப் பிரமாணம்:
“நீலதோயத” என்பது. இது,
தைத்திரீய நாராயண உபநிடதம். 11.
இந்தச் சுலோகத்தை 27-ஆம் பக்கத்தில் காணலாகும்.
2. திருவாழியைத் தனித்துச்
சொல்வதற்குக் கருத்து அருளிச்செய்கிறார்
‘வடிவழகு’ என்று தொடங்கி.
3. “நிறைந்து
என்னுள்ளே நின்றொழிந்தான், நிறைந்த வன் பழி” என்னும்
இரண்டனையும் கூட்டிக் கருத்து
அருளிச்செய்கிறார் ‘அவனுடைய’ என்று
தொடங்கி.
|