முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
238

லாதவை முன்னே நிற்கையாகிறது மிகுந்த கிலேசத்திற்குக் காரணமாய் இருப்பது ஒன்றே அன்றோ. 1‘முன் நிற்கும்’ என்னாநிற்கச்செய்தே அன்றோ ‘பாவியேன்’ என்கிறது. 2கண்களுக்குத் தோற்றாநிற்கச்செய்தே யானைக்குக் குதிரை வையா நின்றது.

(8)

495

    முன்னின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர்
    மன்னுமாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
    சென்னி நீண்முடி ஆதியாய உலப்பில் அணிகலத்தன்
    கன்னல்போல் அமுதாகி வந்துஎன் நெஞ்சம் கழியானே.

   
பொ-ரை :- முன்னே வந்து நிற்கின்றாய் என்று தோழிமார்களும் தாய்மார்களும் முனியாநின்றீர்கள்; நிலைபெற்ற மாடங்களையுடைய திருக்குறுங்குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியை நான் கண்டபின், தலையில் அணிந்திருக்கின்ற நீண்ட திருமுடி முதலான எண்ணில்லாத ஆபரணங்களையுடைய எம்பெருமான், கன்னலாகிப் பாலாகி அமுதாகி வந்து என்நெஞ்சத்தை விட்டு நீங்கமாட்டுகின்றிலன்.

    வி-கு :-
மன்னுதல்-நிலைபெறுதல், பொருந்துதலுமாம். உலப்பு கணக்கு: முடிவு. அணிகலம்-அணிந்திருக்கிற ஆபரணம்; அழகிய ஆபரணமுமாம். கன்னல்-கரும்பு.

    ஈடு :-
ஒன்பதாம் பாட்டு. 3நம்பி, இனிமைகள் எல்லாவற்றோடுங்கூட என்நெஞ்சிலே புகுந்து விடுகின்றிலன் என்கிறாள்.

    முன்னின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர் - 4தோழிமார் முன்புங்கூட நின்று அறியாள்

____________________________________________________

1. அநுபவ யோக்கியம் அல்லாமைக்குக் காரணம் யாது? என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார் ‘முன்நிற்கும்’ என்று தொடங்கி. என்றது,
  முன்னே நிற்கச்செய்தேயும் அநுபவத்திற்குத் தகுதியில்லாமையாலே
  அன்றோ “பாவியேன்” என்கிறது என்றபடி.

2. அநுபவத்திற்குத் தகுதியில்லாமைக்குத் திருஷ்டாந்தம் காட்டுகிறார்
  ‘கண்களுக்கு’ என்று தொடங்கி. ‘யானைக்குக் குதிரை வையா நின்றது’
  என்றது, பிடிகொடுக்குமாறு போலே இருந்து பிடிகொடாதிருந்தது என்றபடி.
  முதற்பத்து ஈட்டின் தமிழாக்கம் பக். 9 காண்க.

3. பாசுரத்தின் ஈற்றடியைக் கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

4. “முன்நின்றாய்” என்கையாலே, முன்பு, இவர்கள் முன்பு நின்று அறியாள்
   என்பது தோன்றுகையாலே அதனை அருளிச்செய்கிறார் “தோழிமார்”
   என்று தொடங்கி.