முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
239

New Page 1

போலே காணும் இவள்தான். 1“எந்தச் சீதாபிராட்டி முன்பு ஆகாயத்தில் வசிக்கின்ற பூதங்களாலும் பார்ப்பதற்கு முடியாதவளோ” என்று சொல்லப்பட்ட பிராட்டியைப் போலே இருக்குமவள் அன்றோ இவள்தான். 2இவள் துணிவைக் கண்டவாறே உகப்பாரோடு, பொடிவாரோடு வேற்றுமை அறப் பொடியத் தொடங்கினார்கள். மன்னுமாடம் - 3“கண்ணபிரானுடைய திருமாளிகை ஒன்றனை மட்டும் சமுத்திர ராஜன் அழிக்க இல்லை” என்கிறபடியே, பிரளயம் முதலானவற்றிலுங்கூட அழியாது என்றிருக்கிறாள். நான் கண்டபின் - 4பிற்காலியாதபடியான நான் கண்டபின். என்றது, நாணம் நீங்கப் பெற்ற நான் கண்டபின் என்றபடி. சென்னி நீண்முடி ஆதியாய உலப்பு இல் அணி கலத்தன் - தலையான முடி தொடக்கமான முடிவில்லாத ஆபரணங்களையுடையவன். அன்றிக்கே, சென்னியில் தரித்திருக்கிற ஆதிராஜ்ய சூசகமான திருமுடி தொடக்கமான எண்ணிறந்த திவ்விய ஆபரணங்களையுடையவன் என்னுதல். 5சேர்த்தி இருக்கிற

___________________________________________________

1. ஒருவர் முன்பும் நின்று அறியாமைக்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘எந்தச்
  சீதாபிராட்டி’ என்று தொடங்கி.

  “யா நஸக்யா புரா த்ரஷ்டும் பூதைராகாஸகைரபி
   டதாமத்ய ஸீ தாம் பஸ்யந்தி ராஜமார்க்ககதாஜநா:”

  என்பது, ஸ்ரீராமா. அயோத். 33 : 8.

2. இவள் உகப்பைப் பின்செல்கின்ற தோழிமார்கள், தாய்மார்களைப் போன்று
  பொடியலாமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘இவள்
  துணிவை’ என்று தொடங்கி. என்றது, “அதிமாத்ர பிராவண்யம் ஸத்தா
  ஹாநி கரம்-மிக அதிகமான ஈடுபாடானது சத்தையைக் கெடுத்துவிடும்”
  என்னுமதனாலே பொடிகிறார்கள் என்றபடி.

3. மன்னுதல் என்பதற்குப் பொருள், நிலைத்திருத்தல் என்பது ஆகையாலே,
  அதனை விரித்து அருளிச்செய்கிறார் ‘கண்ணபிரானுடைய’ என்று தொடங்கி.

  “ப்லாவயாமாஸ தாம் ஸூந்யாம் த்வாரகாம்ச மஹோததி:
   வாசுதேவ க்ருஹம் து ஏகம் ந ப்லாவயதி ஸாகர:”

  என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5.38:9.

4. ‘முன்நின்றாய்” என்றதனைத் திருவுள்ளம்பற்றிப் ‘பிற்காலியாத’ என்று
  தொடங்கி அருளிச்செய்கிறார்.

5. “கலத்தன்” என்னாமல், “அணிகலத்தன்” என்று விஷேடித்ததற்கு, பாவம்
   அருளிச்செய்கிறார் ‘சேர்த்தி’ என்று தொடங்கி. அன்றிக்கே, ‘சேர்த்தி’
   என்று தொடங்கும் வாக்கியம், “கன்னல் பால்