முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
24

ஒழ

ஒழிய, 1அகவாய் புறவாய் ஆயிற்றாகில் காக்கை நோக்கப் பணி போருமித்தனையே அன்றோ? என்னை - என்னைக் காப்பாற்றிக் கொள்வதில் அசக்தனாய்ச் சம்பந்தம் இல்லாதவனுமாய் இருக்கிற என்னை. போர வைத்தாய் புறமே - 2ஏகாந்த போகத்துக்காகப் போந்த பிராட்டி அசோகவனத்திலே இருந்தாற்போலே தோன்றாநின்றதாயிற்று, சொரூப ஞானம் பிறந்த பிறகு தேகத்திலே இருக்கிற இருப்பு. புறமே - உன் குணங்கள் நடையாடாத சம்சாரத்திலே வைத்தாய். 3தம்முடைய சொரூபத்தைப் போன்று ‘கர்மங்களும் அவனைக் குறித்தபோது பரதந்திரங்கள்’ என்று இருக்கும் பரமவைதிகர் ஆகையாலே ‘போரவைத்தாய்’ என்று அவன் செய்தானாகச் சொல்லுகிறார்.

(5) 

448

    புறமறக் கட்டிக்கொண்டு இருவல் வினையார் குமைக்கும்
    முறைமுறை யாக்கை புகல்ஒழியக் கண்டுகொண் டொழிந்தேன்
    நிறமுடை நால்தடந்தோள் செய்யவாய் செய்ய தாமரைக்கண்
    அறமுயல் ஆழி அங்கைக் கருமேனி அம்மான் தன்னையே

_______________________________________________

1. மாக்கேழ் மடநல்லாய்! என்றரற்றும் சான்றவர்
  நோக்கார்கொல் நொய்யதோர் புக்கிலை - யாக்கைக்கோர்
  ஈச்சிற கன்னதோர் தோலறினும் வேண்டுமே
  காக்கை கடிவதோர் கோல்.

  என்பது, நாலடியார்.

  “மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து
  மிக்கோய் இதனைப் புறமறிப் பராய்”

  என்பது, மணிமேக. பளிக்கறை. 113 - 121.

      “பெண் என்பது எற்புச் சட்டகம், முடைக் குரம்பை, புழுப்பிண்டம்,
  பைம்மறியா நோக்கப்பருந்தார்க்கும் தகைமைத்து” என்பது, இறையனார்
  களவியலுரை. 

2. ‘எல்லாரும் இதனை உள்ளாக விரும்பாநிற்க, இவர் “புறமே” என்பான்
  என்?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘ஏகாந்த போகத்துக்காக’
  என்று தொடங்கி.

3. ‘தம்முடைய கர்மங்களுக்குத் தகுதியாக வந்ததனை அவன் செய்தானாகச்
  சொல்லுவான் என்?’ என்ன, ‘தம்முடைய’ என்று தொடங்கி அதற்கு விடை
  அருளிச்செய்கிறார்.