முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
240

படியைத் தெரிவிப்பாள் ‘அணிகலத்தன்’ என்கிறாள். கன்னல் பால் அமுதாகி - இவை, எல்லா ரசங்களுக்கும் உபலக்ஷணம். வந்து என்நெஞ்சம் கழியானே - வந்து என்நெஞ்சில் நின்றும் போகின்றிலன். 1முன்னே நிறுத்தினவனைப் பொடிய மாட்டார்கள்; ‘பெற்றோம், பிழைத்தோம்’ என்று, ‘முன்னின்றாய்’ என்று என்னைப் பொடியுமித்தனை காணும் இவர்கள் வல்லது. 2எனக்கு மறக்கை தேட்டம், முடியாமை இருக்கிறேனத்தனை.

(9)

496

    கழிய மிக்கதொர் காதலள் இவள்என்று அன்னை காணக்கொடாள்
    வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
    குழுமித் தேவர் குழாங்கள் கைத்தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே
    எழுவதோர் உரு என்நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே.

   
பொ-ரை :- மிக அதிகமானதொரு காதலையுடையவள் இவள் என்று, தாயானவள், காண்பதற்கு என்னை விடுகின்றிலள்; குற்றம் இல்லாத கீர்த்தியையுடைய திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பிறகு, நித்தியசூரிகள் கூட்டங்கூட்டமாகக் கூடிக் கைகூப்பித் தொழுது வணங்கச் சோதி வெள்ளத்தின் நடுவில் தோற்றுகிற ஒப்பற்ற வடிவம் எனது மனத்துக்குள்ளே தோன்றுகிறது; இதனை, எத்தனையேனும் ஞானமுடையராயிருப்பினும் அறிந்து கோடல் அரிது.

   
வி-கு :- கழி: உரிச்சொல்; மிகுதிப் பொருளைக் காட்டும். வழு-குற்றம். தேவர்-நித்தியசூரிகள்.

    ஈடு :-
பத்தாம் பாட்டு. 3நம்பியுடைய திருமேனி என் நெஞ்சிலே பிரகாசிக்கிறபடி ஒருவர்க்கும் அறிய ஒண்ணாது என்கிறாள்.

_____________________________________________________

  அமுதாகி” என்றதற்கு, அவதாரிகையாகக் கோடலுமாம்.
  அவதாரிகையாம்போது, அணிந்திருக்கிற ஆபரணங்களின் சேர்த்தி,
  கன்னலும் பாலும் அமுதும் கலந்தாற்போலே இனிமையாக இருக்கின்றது
  என்பது கருத்தாகக் கொள்க.

1. ‘முன்னே நிறுத்தினவனை’ என்றது, தான் என்நெஞ்சுக்குள்ளே இருந்து
   இவர்கள் முன்னே நிற்கச் செய்தவனை என்றபடி.

2. “கழியானே” என்ற ஏகாரத்தின் பொருள், ‘எனக்கு’ என்று தொடங்கும்
   வாக்கியம். முடியாமை-கிடையாமை.

3. திருப்பாசுரத்தின் நான்காவது அடியைக் கடாக்ஷித்து அவதாரிகை
  அருளிச்செய்கிறார்.