முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
252

றுள

றுள் பிரவேசித்து உயிர்ப்பொருளும் உயிரல்பொருளும் ஆனான்” என்கிறபடியே, இவற்றை உண்டாக்கி, இவை பொருளாதல் பெயரடைதல் முதலியவைகளுக்காக அநுப்பிரவேசித்து, இவற்றைச் சொல்லும் சொற்கள் தன்னளவும் வரும்படி இவையாகி நிற்கிறேன் நான் என்னாநின்றாள். 1வாசகமாயாதல் போதகமாயாதல் அவனைக் காட்டக்கடவன அன்றோ; 2தோற்றுகிற இதனைச் சொல்லிக் கொண்டு அபர்யவசான விருத்தியாலே அவனளவும் வருதல், இக்கூட்டத்துக்கே வாசகமாயாதல் இருக்குமேயன்றோ. “ஸச்சத்யச்சாபவத் - 3சேதனமும் அசேதனமும் ஆனார்” என்கிற இது, ஸ்வரூப ஐக்யம் அன்று, “தத்அநுப்ர விஸ்ய-அவற்றுள் அநுப்பிரவேசித்து” என்றதனால், அநுப்பிரவேசத்தின் காரியம் என்னுமிடத்தைச் சொல்லுகிறது. கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்-மஹாபலி போல்வார், பருந்து இறாஞ்சினாற்போன்று இதனை அபஹரித்து ‘என்னது’ என்னும் அன்று, இதனை எல்லை நடந்து மீட்டுக்கொண்டேன் நான் என்னாநின்றாள். என்றது, இவற்றைப் படைத்து, ‘மேல் உள்ளன தாமே நடக்கின்றன’ என்று விடுகை அன்றிக்கே, இவற்றை அடி ஒற்றிக்கொண்டு சென்று காத்தலைத் தெரிவித்தபடி. 4‘அசுரத்தன்மை வாய்ந்தவர்கள் இவன் முன்பு நில்லார்

____________________________________________________

1. தன்னளவும் வரும்படி எப்படி? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘வாசகமாயாதல்’ என்று தொடங்கி.

2. அதனை விவரிக்கிறார் ‘தோற்றுகிற’ என்று தொடங்கி. அபர்யவசான
  விருத்தியாவது, ஒருசொல், தனக்குரிய பொருளைக் காட்டி அவ்வளவில்
  முடிவுபெறாது, தொடர்ந்து மேலும் செல்லுவது. ‘இக்கூட்டத்துக்கே
  வாசகமாயாதால்’ என்றது, ‘காடு’ என்றால், ஒரு மரத்தைமட்டும் குறிக்காமல்,
  எல்லா மரங்களையும் பொதுவாகக் காட்டுவதுபோன்று, ‘தேவதத்தன்’
 
என்றால், இச்சொல், சித்து அசித்து ஈச்வர வாசகமாயிருத்தலைக் குறித்தபடி.
  போதகமாவது, ‘தேவதத்தன்’ என்றால், இச்சொல், முதலில் தோற்றுகிற
  அசித்தைச் சொல்லி, பின், அதனை விரும்பியிருக்கின்ற சேதனனைச்
  சொல்லி, பின், அவனுக்குள்ளேயிருக்கிற ஈச்வரனைச் சொல்லுதல்.

3. கூட்டத்துக்கே வாசகமாகக்கொள்ளுதல் எற்றிற்கு? ஸ்வரூப ஐக்யம்
  சொல்லுகிறது என்று கொண்டாலோ? எனின், அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘சேதனமும் அசேதனமும்’ என்று தொடங்கி.

4. “யானே” என்கிறது என்? இந்திரன் இரக்க இல்லையோ? என்ன, அதற்கு
   விடை அருளிச்செய்கிறார் ‘அசுரத் தன்மை’ என்று தொடங்கி.