முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
256

காலங்களில் உண்டாக்குவேனும் நான் என்னாநின்றாள். கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும் - அவற்றின் சந்தேகங்களைத் தீர்த்துத் தாத்பர்ய நிர்ணயம் செய்வேனும் நான் என்னாநின்றாள். 1பரக்கக் கற்றுவைத்தே “சூந்யமே தத்துவம்” என்கிறார் உளரே அன்றோ. அன்றிக்கே, கற்கின்றவர்களும் கற்பிக்கின்றவர்களும் நான் இட்ட வழக்கு என்னாநின்றாள் என்னுதல். ‘தீர்ப்பேன்’ என்ற சொல், 2இப்பொருளைக் காட்டுமோ? என்னில், தீர்க்கையாவது, அவற்றினுடைய எல்லைகாண்கை அன்றோ. கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும் - அக்கல்வியினுடைய 3சாரமான பிரயோஜனமும் நான் என்னாநின்றாள். கற்கும் கல்விநாதன் வந்து ஏறக்கொலோ - எல்லாக் கல்விகளாலும் அறியப்படுகின்ற சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ? கற்கும் கல்வி உலகத்தீர்க்கு இவை என்சொல்லுகேன் - இப்போது கற்று அறியவேண்டும்படி, பகவத் விஷயத்தில் 4ஒவ்வோக் குழியிடாதே இருக்கிற உங்களுக்கு நான் எதனைச் சொல்லுவது? 5கற்கும் கல்வி என்மகள் காண்கின்றவே - சொன்ன வார்த்தையைச் சொல்லுமித்தனைபோக்கி, தானாக ஒரு வார்த்தை சொல்லமாட்டாத அளவாயிருக்கிற இவள், இவ்விஷயத்திலே இறங்குகிற எல்லையை, நான் எதனைச் சொல்லுவது?

(2)

500

        காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்
            காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும்
        காண்கின்ற வெம் தீஎல்லாம் யானே என்னும்
            காண்கின்றஇக் காற்றெல்லாம் யானே என்னும்

____________________________________________________

1. ஐயம் உண்டானால் அன்றோ தீர்க்க வேண்டும், ஐயத்திற்குக் காரணம்
  யாது? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘பரக்கக் கற்று’ என்று
  தொடங்கி. ‘சூந்யமே தத்துவம்’ என்றது, பிரபஞ்சம் பொய் என்று
  சொல்லுகிற மாயாவாதிகளுக்கும் உபலக்ஷணம்.

2. ‘இப்பொருளை’ என்றது, கற்கின்றவர்களும் கற்பிக்கின்றவர்களும் என்னும்
   பொருளை.

3. சாரமான பிரயோஜனம் - மோக்ஷம்.

4. ஒவ்வோக் குழி - பாலர்கள் எழுத்து இடுகிற வரிக்குழி.

5. “கற்கும் கல்வி என்மகள்” என்பதனை, கல்வி கற்கும் என்மகள் என்று
   மாற்றி, இன்று வார்த்தை கற்கும் பருவமான என் பெண்