|
New Page 1
முறை முறையாக்கை -
1புண்ணியங் காரணமாகத் தேவ சரீரத்தை அடைந்தும், பாவம் காரணமாக விலங்கு முதலான
சரீரங்களை அடைந்தும், இவ்விரண்டு வினைகளும் காரணமாக மனித சரீரத்தை அடைந்தும் படும்பாட்டுக்கு
ஒரு முடிவு இல்லை அன்றோ? 2திறந்து கிடந்த வாசல்தோறும் நுழைந்து திரியும் பொருள்
போலே, கர்மங்களுக்குத் தகுதியாகத் தேவர்கள் முதலான சரீரங்கள்தோறும் பிரவேசித்துத் திரியும்.
புகல் ஒழிய - புகுதல் தவிர. 3ஞான ஆனந்த லக்ஷணமான ஆத்மாவே அன்றோ தோன்றுதல்
வளர்தல் முதலான தொழில்களையுடையதாய், நிலை இல்லாத சரீரத்திலே அகப்பட்டு நோவுபடுகிறது. அது
தவிர, கண்டு கொண்டொழிந்தேன் - உத்தேசிய வஸ்துவைக் கண்டு அநுபவிக்கப் பெற்றேன். பிறவி
நீங்கினேன் என்றபடி.
நி்றமுடை நால்
தடம் தோள் - 4“எல்லா ஆபரணங்களையும் அலங்கரிக்கைக்குத் தகுதியாக இருக்கிற திருத்
தோள்கள்” என்கிறபடியே, ஆபரணத்திற்கு ஆபரணமாய், நான்காய், சுற்றுடைத்தான திருத்தோள்களையுடையனாய்.
செய்ய வாய் செய்ய தாமரைக் கண் - 5“விலாசத்தோடு கூடிய திருமுறுவலுக்கு ஆதாரமான திருமுக
மண்டலத்தையுடையவர்” என்கிறபடியே, “முறுவல் எடுத்த கலம்” என்னும்படி திருமுகத்தைச் செவ்வி
பெறுத்தாநின்றுள்ள புன்சிரிப்பையும், இழவு மறக்கும்படி குளிரக்கடாக்ஷிக்கிற திருக்கண்களையுமுடையனாய்.
அறம் முயல் ஆழி அம் கை-அடியார்களைக் காப்பாற்றுதலாகிற பரம தர்மத்திலே தன்னிலும்
____________________________________________________
1. குமைத்தலை
விளக்குகிறார் ‘புண்ணியம் காரணமாக’ என்று தொடங்கி.
குமைத்தல்-தகர்த்தல்.
2. “முறை முறை” என்றதற்கு,
பாவம் அருளிச்செய்கிறார் ‘திறந்து கிடந்த’
என்று தொடங்கி. திரியும் பொருள்-நாய்.
3. தேவ சரீரம் முதலான
சரீரங்களை மேற்கொள்ளுவது சுகம் அன்றோ?
அதனைத் தவிர வேண்டுவது என்? என்ன, விடை அருளிச்செய்கிறார்
‘ஞான ஆனந்த’ என்று தொடங்கி.
4. “சர்வ பூஷண பூஷார்ஹா:”
இது, ஸ்ரீராமா. 3 : 14.
“பூணுக்கு அழகளிக்கும்
பொற்கொடி” என்றார் பிறரும்.
5. “ஸவிலாச ஸ்மிதாதாரம்
பிப்ராணம் முக பங்கஜம்” இது, ஸ்ரீ விஷ்ணுபுரா.
5. 17 : 21. இந்தச் சுலோகத்திலுள்ள “ஸ்மித ஆதாரம்”
என்ற பதங்களுக்குப்
பொருள், ‘முறுவல் எடுத்த கலம்’ என்பது. ‘இழவு’ என்றது,
மேற்பாசுரத்திற்கூறிய
இழவினை.
|