முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
261

502

 

 திறம்பாமல் மண்காக்கின்றேன் யானே என்னும்
            திறம்பாமல் மலைஎடுத் தேனே என்னும்
        திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும்
            திறங்காட்டி அன்றைவரைக் காத்தேனே என்னும்
        திறம்பாமல் கடல்கடைந் தேனே என்னும்
            திறம்பாத கடல்வண்ணன் ஏறக் கொலோ?
        திறம்பாத உலகத்தீர்க்கு என்சொல் லுகேன்?
            திறம்பாது என்திரு மகள் எய்தினவே.

 

    பொ-ரை :- நன்னெறியினின்றும் ஒருவரும் பிறழாதவாறு உலகத்தை எல்லாம் காக்கின்றவன் யானே என்னும், தளர்ச்சி இல்லாமலே கோவர்த்தனம் என்னும் மலையை எடுத்தேன் என்னும், தப்பாதபடி அசுரர்களைக் கொன்றேன் என்னும், திறமைகளைக் காட்டி அக்காலத்தில் பாண்டவர்களைக் காப்பாற்றினேன் என்னும், தப்பாமல் சமுத்திரத்தைக் கடைந்தேன் என்னும், தன்விதிகளை ஒருவரும் தப்ப ஒண்ணாதவாறு இருக்கின்ற கடல்வண்ணனாகிய சர்வேச்வரன் ஆவேசித்தானோ? பகவானுடைய குணங்களில் நின்றும் மீளாதவாறு என்மகள் எய்தியவற்றை, கேட்டு அல்லது மீளாத உலகத்தார்க்கு எதனைச் சொல்வேன்?

    ஈடு :-
ஐந்தாம் பாட்டு. உலகத்தைப் பாதுகாத்தல் தொடக்கமான செயல்களை எல்லாம் செய்தேன் நான் என்னாநின்றாள் என்கிறாள்.

    திறம்பாமல் மண்காக்கின்றேன் யானே என்னும்-1ஒருவர் கூறை எழுவர் உடாதபடி, “இந்தப் பரமாத்மாவினிடமிருந்து பயந்து காற்று வீசுகிறது” என்கிறபடியே, பூமியை நோக்குகிறேன் நான் என்னும். திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும் - ஒரு பசுவின் மேலாதல், ஓர் ஆயன் மேலாதல் ஒரு துளிபடாதபடி கோவர்த்தனகிரியைத்

____________________________________________________

1. “திறம்பாமல்” என்பதற்கு, ஒருவர் நிமித்தமான அச்சத்தாலே ஒருவர்
   அஞ்சாதபடி என்று பொருள்கூறத் திருவுள்ளம்பற்றி
   அதனைஅருளிச்செய்கிறார் ‘ஒருவர்’ என்று தொடங்கி. ஒருவர் கூறை
   எழுவர் உடுக்கையாவது, ஒருவன் கையில் உள்ள புடைவையை ஒருவன்,
   அவன் கையிலுள்ள அதனை வேறு ஒருவன் பறிக்க, இப்படியே ஏழு
   பேராகப் பறித்து உடுத்தல். இது, எளியாரை வலியார் வருத்துவதற்குத்
   திருஷ்டாந்தம். இப்படி, எளியாரை வலியார் வருத்தாதபடி அவர் அவர்கள்
   மரியாதைகளிலே நிறுத்திப் பூமியைக் காக்கிறேன் என்றபடி.