|
502
தரித்துப் பாதுகாத்தேனும்
நான் என்னாநின்றாள். திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும் - அசுரர்களுடைய கூட்டத்தைத்
தப்பாதபடி அறுத்துப் போகட்டேன் என்னும். திறம் காட்டி அன்று ஐவரைக் காத்தேனே என்னும் -
1உலகத்தில் என்படிகளைக் காட்டி, பகலை இரவாக்கியும், ‘ஆயுதம் எடேன்’ என்று
ஆயுதம் எடுத்தும், பகைவர்களுடைய உயிர்நிலையைக் காட்டியும் இப்படி அன்று பாண்டவர்கள்மேல் அன்பு
வைத்து அவர்களைக் காப்பாற்றினேனும் நான் என்னாநின்றாள். “கிருஷ்ணா! வெற்றியையாவது இராச்சியத்தையாவது
நான் விரும்பவில்லை” என்ற அருச்சுனனை, “இப்போதே போரைச் செய்ய வேணும் என்கிற உன்னுடைய
வார்த்தையை நிறைவேற்றி விடுகிறேன்” என்னச் செய்தானே அன்றோ. திறம்பாமல் கடல் கடைந்தேனே
என்னும்-ஒருதாழிக்கு உட்பட்ட தயிரை ஒன்றும் பிரிகதிர்ப்படாதபடி கடைவாரைப் போலே, சமுத்திரம்
என்கிற மஹாதத்துவத்தின் நடுவே மந்தரத்தை நட்டுக் கடைகிற இடத்துக் கீே்ழ விழுதல் மேலே கொந்தளித்தல்
செய்யாதபடி கடலைக் கடைந்தேனும் நான் என்னும். திறம்பாத கடல்வண்ணன் ஏறக்கொலோ - தன் சாசனத்தை
ஒருவரால் தப்ப ஒண்ணாதபடியாயிருக்கிற, அளவிட்டு அறிய ஒண்ணாத தன்மையனான சர்வேச்வரன் வந்து
ஆவேசித்தானோ? திறம்பாத உலகத்தீர்க்கு என்சொல்லுகேன் - கேட்டு அல்லது கால்வாங்கோம் என்று
இருக்கிற உங்களுக்கு நான் எதனைச் சொல்லுவது. திறம்பாது என் திருமகள் எய்தின - திருமகளை ஒத்த
என் மகள், ஹிதம் சொல்லி மீட்க ஒண்ணாத
____________________________________________________
1. திறம் காட்டி-பக்ஷபாத
பிரகாரங்களைக் காட்டி என்னுதல். திறம் என்று
சமூகமாய், தத்துவ விவேகம் தொடங்கிப் பிரபத்தி
முடிவாகவுள்ள அர்த்த
சமூகங்களைக் காட்டி என்னுதல். இந்த இரண்டு பொருள்களையும் முறையே
அருளிச்செய்கிறார்
‘உலகத்தில்’ என்று தொடங்கியும், ‘கிருஷ்ணா!’ என்று
தொடங்கியும்.
“நகாங்க்ஷே விஜயம் க்ருஷ்ண
நச ராஜ்யம் ஸுகாநிச
கிம்நோ ராஜ்யேந கோவிந்த
கிம் போகை: ஜீவிதேநவா”
“நஷ்டோ மோஹ: ஸ்மிருதி:
லப்தா த்வத் ப்ரசாதாத் மயாஅச்யுத
ஸ்திதிஸ்மி கதஸந்தேஹ:
கரிஷ்யே வசனம் தவ”
என்பன, ஸ்ரீகீதை. 1 : 32,
18 : 73.
|