|
தர
படி அடைந்தவற்றை நான்
எதனைச் சொல்லுவது? 1ஆழங்காலிலே இழிந்தார்படியைக் கரையிலே நின்றாராலே சொல்லப்போமோ.
(5)
503
இனவேய்மலை ஏந்தினேன்
யானே என்னும்
இனஏறுகள் செற்றேனும்
யானே என்னும்
இனஆன்கன்று மேய்த்தெனும்
யானே என்னும்
இனஆநிரை
காத்தேனும் யானே என்னும்
இனஆயர் தலைவனும்
யானே என்னும்
இனத்தேவர்
தலைவன் வந்து ஏறக்கொலோ?
இனவேற்கண் நல்லீர்க்கு
இவைஎன் சொல்லுகேன்?
இனவேற் கண்ணி
என்மகள் உற்றனவே.
பொ-ரை :-
கூட்டம் கூட்டமான மூங்கில்களையுடைய கோவர்த்தனம்
என்னும் மலையைத் தூக்கினவனும் நானே என்னும், ஒத்த இடபங்களைக் கொன்றவனும் யானே என்னும்,
ஒத்த பசுவின் கன்றுகளை மேய்த்தேனும் யானே என்னும், ஒத்த ஆயர்களுக்குத் தலைவனும் யானே என்னும்,
கூட்டம் கூட்டமான நித்தியசூரிகளுக்குத் தலைவனான சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ? வேலை ஒத்த
கண்களையுடைய நல்லவர்களான உங்களுக்கு, வேலை ஒத்த கண்களையுடையவளான என் மகள் அடைந்தனவற்றை
என்சொல்லுவேன்?
ஈடு :- ஆறாம்
பாட்டு. கோவர்த்தன மலையைத் தூக்கித் தரித்திருத்தல் முதலான, கிருஷ்ணனுடைய செயல்களை எல்லாம்
செய்தேன் நான் என்னா நின்றாள்.
இன வேய் மலை ஏந்தினேன்
யானே என்னும்-2அணுக்கனைக் கவிழ்த்துப் பிடித்தாற்போலே, திரள்திரளான மூங்கிலையுடைத்தான
மலையை வருத்தம் இன்றியே தரித்தேன் நான் என்னாநின்றாள். இனம் ஏறுகள் செற்றேனும் யானே என்னும்
- ஒன்று இரண்டு அன்றிக்கே 3யமனுக்கு ஒத்தனவாக இருக்கிற இடபங்கள் ஏழனையும்
ஒருகாலே ஊட்டியாக நெரித்துப் போகட்டேன் நான் என்னும். இன
______________________________________________________
1. அவள் அடைந்ததை உன்னாலே
சொல்லப்போகாதோ? என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘ஆழங்காலிலே’ என்று தொடங்கி.
2. அணுக்கன் - குடை.
3. “இன ஏறுகள்” என்றவிடத்தில், இனம் என்றது, ஒத்ததாய், யமனுக்கு
ஒத்ததாயிருக்கிறபடி.
|