|
ப
ஆன்கன்று மேய்த்தேனும் யானே என்னும் - 1“கன்றுகளின்
நடுவில் உள்ளவனும் இளமைப்பருவமுடையவனும்” என்கிறபடியே, என்னோடு ஒத்த பருவமுள்ள கன்றுகளை மேய்த்தேனும்
நான் என்னும். இன ஆநிரை காத்தேனும் யானே என்னும் - முன்பு பிரஹ்மசர்யம் அநுஷ்டித்துப் பின்பு
இல்லற தர்மம் அநுஷ்டிப்பாரைப் போலே, இளமைப் பருவத்தில் கன்றுகளை மேய்த்து, பருவம் நிரம்பின
பின்பு பசுக்களை மேய்த்தேனும் நான் என்னும். இன ஆயர் தலைவனும் யானே என்னும் - 2“தன்னேராயிரம்
பிள்ளைகள்” என்கிறபடியே என்னோடு ஒத்த பருவத்தில் பிள்ளைகளும் நானுமாகத் தீம்பு செய்து திரிகிற
இடத்தில் அவர்களில் என்னளவு தீம்பு செய்கின்றவர்கள் இலர் என்னும். இனத்தேவர் தலைவன் வந்து
ஏறக்கொலோ-வேறு ஒன்றிலும் விருப்பம் இல்லாதிருத்தலுக்குத் தன்னோடு ஒத்திருக்கிற நித்தியசூரிகளுக்கு
நிர்வாஹகனான சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ? அன்றிக்கே, இனத்தேவர் என்பதற்கு, தனியே
அநுபவிக்க ஒண்ணாமையாலே திரள்திரளாக இருக்கிற நித்தியசூரிகள் என்னுதல். 3“அடியார்கள்
குழாங்கள்” என்னக்கடவதன்றோ. இனம் வேல் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன் - இவள் நிலை
எவ்வளவாய்த் தலைக்கட்டுகிறது என்று, வேல் ஒழுங்கு போலே கூர்க்கப் பார்த்துக்கொண்டிருக்கிற
உங்களுக்கு நான் எதனைச் சொல்லுவேன்? ஏன் தான், சொல்ல அருமை என்? என்ன, இனம் வேல் கண்ணி
என்மகள் உற்றன-தன் கண்களுக்கு இலக்கானார் படுமதனைத் தான் படுகிறபடியைச் சொல்லப் போமோ?
4“உயிர்காமின்கள் ஞாலத்துள்ளே” என்பதே அன்றோ இவள் கண்களுக்கு இலக்கானார்
படுவது.
(6)
_____________________________________________________
1. “வத்ஸ மத்யகதம் பாலம் நீலோத்பல தளச்சவிம்”
என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா.
5. 17 : 19.
2. “தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர்நடை
இட்டு வருவான்” என்பது,
பெரியாழ்வார் திருமொழி.
3. திருவாய்மொழி, 2, 3 : 10.
4. “கடாவிய வேகப் பறவையின் பாகன்
மதனசெங்கோல்”
நடாவிய கூற்றம் கண்டீர் உயிர்
காமின்கள் ஞாலத்துள்ளே”
என்பது, திருவிருத்தம் 6.
|