முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
266

என

என்னும்-எனக்கு, காரணம் இல்லாமல் வந்த பந்துக்கள் அல்லாதார் இலர் என்னும். அவர்கள் இப்படி இருக்கச் செய்தே காரணமில்லாமல் வந்து பந்துவாய் எல்லாரிடத்திலும் அன்புடையனாயிருப்பன் என்னுதல். உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்-அவர்களிலே சிலர் வந்து என்னை அடையும்படி செய்கின்றேனும் யானே என்னும். உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்-அவர்களுக்கு வேறு பிரயோஜனங்களிலே ருசி உண்டானால், அந்தப் பிரயோஜனங்களைக் கொடுத்து என்பக்கல் நின்றும் அகற்றுவேனும் யானே என்னும். அன்றிக்கே, அவர்களை அழகு முதலியவைகளாலே அழிப்பேனும் யானே என்னாநின்றாள் என்று ஆண்டான் பணித்தானாக 1இளையபெருமாள் பணிப்பர்.

    உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும் - என் பக்கல் வேறு பிரயோஜனங்களை விரும்பாதவர்களாய் என்னை அடைகின்றவர்கட்கு, என்னளவு வேறு பிரயோஜனங்களை விரும்பாதவர் இலர் என்னுதல். அன்றிக்கே, என்னையே எல்லா உறவு முறையுமாகப் பற்றினவர்கட்கு, நானும் அவர்களையே எல்லா உறவு முறையுமாக இருப்பேன் என்னுதல். உற்றார் இலி மாயன் வந்து ஏறக்கொலோ - இற்றைக்கு முன்பு தம் முயற்சியால் கிட்டினவர்கள் ஒருவரும் இல்லாதபடி இருக்கிற ஆச்சரியத்தையுடைய சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ? உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான்-இங்ஙனம் சந்தேகிக்கலாமோ, உறவினர்களுக்கு அறுதியிட்டுச் சொல்லவேணுங்காண் என்ன, உறவு முறையராமித்தனையோ வேண்டுவது, சொல்ல வேண்டுவன இருந்து சொல்ல வேண்டாவோ, என்ன பாசுரத்தைச் சொல்லிச் சொல்லுவேன்? ஏன்தான், சொல்ல ஒண்ணாமைக்கு வந்தது என்? என்னில், என்னுடைப் பேதை உற்று உரைக்கின்றவே-பருவம் நிரம்பாத என் பெண், மறுபாடுருவத் தைத்துச் சொல்லுகிறவற்றை, கரையிலே நிற்கிற நான் எதனைச் சொல்லுவது? 2திருத்தாயாரான

____________________________________________________

1. இளையபெருமாள்-முதலியாண்டான் ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரயித்த ஒரு
  பெரியார்.

2. ஸ்வாபதேசத்திலே ஜிஜ்ஞாஸு பிரஸ்நத்தை அநுவதித்துப் பரிஹரிக்கிறார்
  ‘திருத்தாயாரான’ என்று தொடங்கி.