முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
267

நிலையும் இவர்க்கே உள்ளது ஒன்றாகில் இங்குச் சொல்ல ஒண்ணாதபடி கலங்குகையாவது என்? என்னில், 1“தனக்கும் தன்தன்மை அறிவரியான்” என்கிறபடியே, சர்வேச்வரனை, தன்படி தானும் அறியான் என்று சொல்லுமாறு போலே, தம்நிலை தமக்குங்கூடப் பேச்சுக்கு நிலம் அன்று என்கிறது.

(7)

505

        உரைக்கின்ற முக்கட்பிரான் யானே என்னும்
            உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும்
        உரைக்கின்ற அமரரும் யானே என்னும்
            உரைக்கின்ற அமரர்கோன் யானே என்னும்
        உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்
            உரைக்கின்ற முகில்வண்ணன் ஏறக்கொலோ?
        உரைக்கின்ற உலகத்தீர்க்கு என்சொல் லுகேன்?
            உரைக்கின்ற என்கோமள ஒண் கொடிக்கே.


    பொ-ரை :-
தாமத புராணங்களிலே சொல்லப்படுகின்ற சிவபிரானும் யானே என்பாள், அவனுக்கும் தமப்பனாகச் சொல்லப்படுகின்ற பிரமனும் யானே என்பாள், சொல்லப்படுகின்ற தேவர்களும் யானே என்பாள், சொல்லப்படுகின்ற தேவர்கள் தலைவனான இந்திரனும் யானே என்பாள், உரைக்கின்ற முனிவர்களும் யானே என்பாள், வேதங்களிலே பிரசித்தமாகச் சொல்லப்படுகின்ற மேகம் போன்ற நிறத்தையுடைய சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ? சொல்லு சொல்லு என்று பேசுகின்ற உங்களுக்கு, உலக விஷயத்தைக் கடந்து பேசுகின்ற அழகிய கொடி போன்ற என் பெண் விஷயத்தில் எதனைச் சொல்லுகேன்?

    ஈடு :-
எட்டாம் பாட்டு. உலகத்திற்குப் பிரதாநரான பிரமன் முதலான தேவர்கள் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள் என்கிறாள்.

    உரைக்கின்ற முக்கட்பிரான் யானே என்னும் - 2வேதத்திலே பகவானுடைய செல்வங்கள் பரக்கச்

_____________________________________________________

1. திருவாய். 8. 4 : 6.

2. “உரைக்கின்ற” என்பதற்கு, பரம்பொருளாக உரைக்கப்படுகின்ற என்றும்,
   பகவானுக்குச் சரீரமாக உரைக்கப்படுகின்ற என்றும் இரண்டுவிதமாகப்
   பொருள் அருளிச்செய்யத் திருவுள்ளம்பற்றி, அவ்விரண்டு
   பொருள்களையும் முறையே அருளிச்செய்கிறார் ‘வேதத்திலே’ என்று
   தொடங்கியும், ‘அன்றிக்கே’ என்று தொடங்கியும்.