முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
27

New Page 1

முயலாநின்றுள்ள திருவாழியையுடைய அழகிய திருக்கையையும், கரு மேனி - அதற்குத் தப்பிலும் தப்ப ஒண்ணாத குளிர்ந்த வடிவழகையும், அம்மான் தன்னை - ‘இவை எல்லாம் எனக்கு’ என்று அநுபவிக்கும்படியான சம்பந்தத்தையுமுடையவனைக் காணப்பெற்றேன் என்க. 1“அந்தத் துவாரத்தின் மத்தியில் பரமாத்மாவினது அப்ராகிருதமான சரீரமானது மெல்லியதாயும் மேல் நோக்கின பிரகாசத்தையுடையதாகவும் இருக்கிறது; அத் திருமேனி எங்ஙனம் இருக்கிறது? எனின், கரிய மேகத்தை நடுவிலுடையதான மின்னற்கொடி போன்று மெல்லியதாகவும் உருக்கின தங்கம் போன்ற காந்தியையுடையதாயுமிருக்கிற ஒரு சிகை இருந்தால் அதுபோன்று இருக்கிறது” என்கிறபடியே, இருதயத்திலே இருக்கிற படி. முன்பு 2இவ்வுடம்பு அவ்வுடம்பை மறப்பித்தாற் போலே இப்போது அவ்வுடம்பு இவ்வுடம்பை மறப்பித்தது.

(6)

449

    அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ்விடத்தான்? யான் ஆர்?
    எம் மா பாவியர்க்கும் விதிவாய்க்கின்று வாய்க்குங் கண்டீர்
    கைம் மா துன்பொழித்தாய்! என்று கைதலை பூசலிட்டே
    மெய்ம் மாலாய் ஒழிந்தேன் எம்பிரானும்என் மேலானே.

   
பொ-ரை :- எல்லார்க்கும் சுவாமியும் திருவாழியைத் தரித்திருக்கின்ற உபகாரகனுமான அந்தச் சர்வேச்வரன் எவ்விடத்திலே உள்ளவன், யான் எங்கே உள்ளவன், துதிக்கையையுடைய யானையினது துன்பத்தை நீக்கினவனே! என்று சொல்லிக் கைகளைத் தலையிலே வைத்துக்கொண்டு மனத்தொடு படாமலே கூப்பிட, அது உண்மையான பக்தியாக மாறும்படி நின்றேன்; எம்பிரானும் என்மேலே காதல்

_______________________________________________

1. ஆயின், இவர் கண்டாரோ? எனின், ‘அந்தத் துவாரத்தின் மத்தியில்’ என்று
  தொடங்கி அதற்கு விடை அருளிச் செய்கிறார்.

  தஸ்யமத்யே வஃநிசிகா அணீய ஊர்த்வா வ்யவஸ்தித:
  நீலதோயத மத்யஸ் தா வித்யுல்லேகேவ பாஸ்வரா
  நீவார சூகவத் தந்வீ பீதாபா ஸ்யாத் தநூபமா.

  இது, தைத்திரீய நாராயண உபநிடதம்.

2. இவ்வுடம்பு-ஆழ்வாருடைய திருமேனி. அவ்வுடம்பு-இறைவனுடைய திருமேனி.