முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
270

New Page 1

கொம்போடே சேராத போது தறைப்படும் பருவம் என்பதனைச் சொல்லிற்று.

(8)

506

        கொடிய வினை யாதும் இலனே என்னும்
            கொடிய வினை ஆவேனும் யானே என்னும்
        கொடிய வினை செய்வேனும் யானே என்னும்
            கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்
        கொடியான் இலங்கை செற்றேனே என்னும்
            கொடிய புள்ளுடையவன் ஏறக் கொலோ?
        கொடிய உலகத்தீர்க்கு இவைஎன் சொல்லுகேன்?
            கொடியேன் கொடிஎன் மகள் கோலங்களே.


    பொ-ரை :-
கொடுமை பொருந்திய கர்மங்கள் ஒரு சிறிதும் எனக்கு இல்லை என்னும், கொடிய கர்மங்கள் ஆவேனும் யானே என்னும், கொடிய பாவங்களைச் செய்விப்பவனும் யானே என்னும், கொடிய பாவங்களைத் தீர்க்கின்றவனும் யானே என்னும், கொடியவனான இராவணனுடைய இலங்காபுரத்தை அழித்தேனே என்னும், பகைவர்களுக்குக் கொடுமையை விளைவிக்கின்ற கருடப்பறவையை வாகனமாகவுடைய சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ? கொடுமையையுடைய உலகத்தீர்க்கு, மஹாபாவியேனான என்னுடைய கொடி போன்ற பெண்ணானவள் செய்கின்ற அழகிய காரியங்களைப் பற்றி என் சொல்லுவேன்?

    ஈடு :-
ஒன்பதாம் பாட்டு. கர்மங்களுக்குக் கட்டுப்படாமை முதலான, பகவானுடைய வார்த்தைகளைத் தன்னுடையனவாகப் பேசாநின்றாள் என்கிறாள்.

    கொடிய வினை யாதும் இலனே என்னும் - கர்மங்களுக்குக் கட்டுப்பட்டவர்களை அருளின்றி நலியும் கர்மங்கள் எனக்கு ஒன்றும் இல்லை என்னும். 1“ஜீவாத்மாவுக்கு வேறுபட்ட சர்வேச்வரன் கர்மபலத்தை அநுபவியாமல் மிகவும் பிரகாசிக்கிறான்” என்றும், 2“என்னைக் கர்மங்கள் ஒட்டுவன இல்லை, கர்ம பலத்தில் எனக்கு ஆசை

____________________________________________________

1. “தயோ: அந்ய: பிப்பலம் ஸ்வாது அத்தி அநஸ்நந் அந்ய:
   அபிசாக ஸுதி”

  என்பது, உருக்கு வேதம்.

2. “ந மாம் கர்மாணி லிம்பந்தி ந மே கர்மபலே ஸ்ப்ருஹா”


  என்பது. ஸ்ரீ கீதை. 4.14.