முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
272

விடத்தில் 1‘கொடியான்’ என்றது, திருத் தாயார் வார்த்தை காண்’ என்று அருளிச்செய்வர் சீயர், எதிரிகளை இவன் ஒன்றாக மதித்திருந்தானாகாமைக்கு; அவனாலே ஆவேசிக்கப்பட்டவள் அன்றோ இவள். கொடிய புள்ளுடையவன் ஏறக்கொலோ - அடியார்களுடைய பகைவர்களுக்கு யமனை ஒத்தவனான பெரிய திருவடியை வாஹனமாகவுடைய சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ? 2கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன் - ‘கேட்க வேணும்’ என்று திரண்டு கிடக்கிற உலகத்தீர்க்கு என்னுதல். ‘இது கூடும்; கூடாது’ என்று பாராமல் ‘சொல்லு சொல்லு’ என்று நிர்ப்பந்தித்து 3ஸ்வகாரியத்தில் நோக்குள்ளவர்களாயிருக்கிற உங்களுக்கு எதனைச் சொல்லுவது என்னுதல். கொடியேன் கொடி என்மகள் கோலங்களே - இவள் அநுகரித்துச் சொல்லுகிற பாசுரங்களைக் கேட்க வேண்டும்படியான பாவத்தைச் செய்த என்னுடைய மகள் செய்கிற 4காணத்தக்க இனியவான செயல்களை. அன்றிக்கே, ஒருப்பாடுகளை என்னுதல்.

(9)

507

        கோலங்கொள் சுவர்க்கமும் யானே என்னும்
            கோலமில் நரகமும் யானே என்னும்
        கோலம்திகழ் மோக்கமும் யானே என்னும்
            கோலம்கொள் உயிர்களும் யானே என்னும்

___________________________________________________

1. பெண்பிள்ளை சர்வேச்வரனை அநுகரித்துச் சொல்லுகிறாளாகையாலே,
  இவள் சொன்ன போதே அவன் சொன்னதாகும் என்று கொண்டு,
  ‘எதிரிகளை இவன் ஒரு பொருளாக மதித்திருந்தவனல்லனாதலின்,
  ‘கொடியான் என்றது’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.

2. “கொடிய” என்பதற்குப் பொருள், திரண்டு கிடக்கிற என்பது. கொடிய
   என்பது, கோடிய என்றாய், கோடுதல் வளைதலாய், அது திரண்டு
   கிடத்தலைக் குறிக்கிறது.

3. “கொடிய” என்பதற்கு, இரண்டாவது பொருள், ஸ்வகாரியத்தில்
   நோக்குள்ளவர்கள் என்பது. இங்குக் “கொடிய” என்பது, ஸ்வகாரியத்தில்
   நோக்குடைமையாகிற கொடுமை.

4. “கோலங்கள்” என்பதற்கு, இருபொருள், ஒன்று, காணத்தக்க இனியவான
   செயல்கள். மற்றொன்று, ஒருப்பாடு. இரண்டாவது பொருளில், கோலுதல்
   -முயற்சியாய், ஒருப்பாட்டினைக் குறிக்கின்றது என்றபடி.