|
New Page 1
கோலம்கொள் தனிமுதல்
யானே என்னும்
கோலம்கொள்
முகில்வண்ணன் ஏறக்கொலோ?
கோலம்கொள்
உலகத்தீர்க்கு என்சொல்லு கேன்?
கோலம்திகழ்
கோதைஎன் கூந்த லுக்கே.
பொ-ரை :- அழகினைக் கொண்டுள்ளதான சுவர்க்கமும் யானே
என்பாள், அழகு இல்லாத நரகமும் யானே என்பாள், அழகோடு விளங்குகிற பரமபதமும் யானே என்பாள்,
அழகினைக் கொண்ட உயிர்களும் யானே என்பாள், அழகினைக் கொண்டிருக்கின்ற ஒப்பற்ற மூலப்பகுதியும்
யானே என்பாள், அலங்காரத்தைக் கொண்ட மேகம் போன்ற நிறத்தையுடைய சர்வேச்வரன் வந்து
ஆவேசித்தானோ? அலங்காரத்தைச் செய்துகொண்டு வந்து நிற்கிற உலகத்தீர்க்கு, அழகோடு
விளங்குகிற மாலையைத் தரித்த கூந்தலையுடைய என் மகளுக்கு உண்டான நிலைகளைப் பற்றி எதனைச்
சொல்லுவேன்?
ஈடு :- பத்தாம்
பாட்டு. சுவர்க்கம் முதலான பொருள்கள் எல்லாம் நான் இட்ட வழக்கு என்னாநின்றாள் என்கிறாள்.
கோலம் கொள்
சுவர்க்கமும் யானே என்னும் - சுகரூபமான சுவர்க்கமும் யானே என்னும். 1நிலை நில்லாமையாலே,
முகப்பில் காட்சிக்கினியதாந் தன்மையைப் பற்ற, ‘கோலம் கொள்’ என்கிறது. 2‘நரகத்தோடு
ஒத்திருக்கச் செய்தே, வாசலிலே கழஞ்சு செம்மண் பூசி இருக்குமாறு போலே காண்’ என்று அருளிச்செய்வர்
சீயர். கோலம் இல் நரகமும் யானே என்னும் - மேல் எழப் பார்க்கையில் அங்ஙனமும் ஒன்று
இன்றியிலே இருக்கிற நரகமும் நான் இட்ட வழக்கு என்னாநின்றாள். கோலம் கொள் மோக்கமும்
யானே என்னும் - மீண்டு வருந்தன்மை இல்லாததாய்ச் சுகத்திற்கே இருப்பிடமானதான மோக்ஷமும் நான்
இட்ட வழக்கு என்னாநின்றாள். “கடல் ஞாலம் செய்தேன்” என்று, படைப்புத் தொடங்கி, “மோக்கமும்
யானே”
____________________________________________________
1. சுவர்க்கம், பரமபதம்
போன்று சுகரூபமாக இருக்குமோ? என்ன, மேலே,
“கோலம் திகழ் மோக்கம்” என்று விசேடிக்கையாலே
அது இல்லை
என்கிறார் ‘நிலை நில்லாமையாலே’ என்று தொடங்கி. நிலை
நில்லாமையாலே, என்றது,
நிலை நில்லாததுமாய், துக்கம் கலந்ததுமான
சுகத்தையுடையதாகையாலே என்றபடி.
2.
‘முகப்பிலே காட்சிக்கு இனியதாந் தன்மையைப்பற்ற’ என்பதற்கு,
பெரியாருடைய சம்வாதத்தைக் காட்டுகிறார்
‘நரகத்தோடு’ என்று தொடங்கி.
சீயர் - நஞ்சீயர்.
|