|
508
508
கூந்தல் மலர்மங்கைக்கும்
மண்மடந் தைக்கும்
குலஆயர்
கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி
வளநாடன் மன்னு
குருகூர்ச்
சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ்மாலை
ஆயி ரத்துள்
இவையும்ஓர்
பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெருஞ்செல்வத்
தராய்த் திருமால்
அடியார்
களைப் பூசிக்க நோற்றார்களே.
பொ-ரை :- மயிர் முடியையுடைய பெரிய பிராட்டியார்க்கும்
பூமிப்பிராட்டிக்கும் ஆயர்குலத்துக்குக் கொழுந்து போன்ற நப்பின்னைப் பிராட்டிக்கும் கணவனான
சர்வேச்வரனை, பொருந்திய வளப்பத்தையுடைய வழுதி நாடரும், நிலைபெற்ற திருக்குருகூரில் அவதரித்த
சடகோபருமான நம்மாழ்வாரால் குற்றேவல் செய்து ஆராய்ந்து சொல்லப்பட்ட தமிழ்ப் பாசுரங்கள்
ஆயிரத்துள் இப்பத்துப் பாசுரங்களையும் வல்லவர்கள், தரித்த பெரிய செல்வத்தையுடையவர்களாகிச்
சர்வேச்வரனுடைய அடியார்களைப் பூசிப்பதற்குப் புண்ணியம் செய்தவர்கள் ஆவார்கள்.
ஈடு :-
முடிவில், 1இத்திருவாய்மொழியைக் கற்க வல்லவர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அடிமை செய்யப்பெறுவர்கள்
என்கிறார்.
கூந்தல் மலர்மங்கைக்கும்
- சர்வேச்வரனுடைய ஐச்வரியத்துக்கும் காரணமாயிருக்கிற பெரிய பிராட்டியார். அன்றிக்கே,
2“சர்வேச்வரனுடைய செல்வமாக இருப்பவள்” என்கிறபடியே, சர்வேச்வரனுடைய செல்வமாயிருக்கிற
பெரிய பிராட்டியார் என்னுதல். மண் மடந்தைக்கும் - அந்தச் செல்வத்திற்கு விளைபூமியாயிருக்கிற
ஸ்ரீ பூமிப்பிராட்டி. குல ஆயர் கொழுந்துக்கும் - அதனுடைய 3பல உருவமாயிருக்கும் நப்பின்னைப்
பிராட்டி. கேள்வன்
____________________________________________________
1. “இவையும் ஓர்பத்தும்
வல்லார் திருமால் அடியார்களைப் பூசிக்க
நோற்றார்களே” என்றதனைக் கடாக்ஷித்து அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
2. “நித்யைவ ஏஷா ஜகந்மாதா
விஷ்ணோ : ஸ்ரீ : அநபாயிநீ
யதா ஸர்வகதோ விஷ்ணு
: ததைவ இயம் த்விஜோத்தம”
என்பது, ஸ்ரீ விஷ்ணுபுராணம், 1. 8 :
17.
3. பல உருவம் - அநுபவரூபம்.
|