முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
281

கூ

கூடியிருப்பது ஒன்று இல்லை என்றபடி. “ந ச ஆத்மவேதீ-ஞானயோகமுடையேனல்லேன்” என்றது, 1தாச்சீல் யந் தோன்ற இருப்பன், எனக்கு அதுதானும் இல்லை. 2“அந்தப் பரமனைப் பற்றிய ஞானம்தான் ஞானம் என்ற சொல்லால் சொல்லக்கூடியது; ஆகையால், மேற்சொல்லிய ஞானத்திற்கு வேறானது அஜ்ஞானமாகச் சொல்லப்பட்டது” என்கிறபடியே, ஆத்மாவைப் பற்றிய உண்மையான ஞானத்தை முன்னாகக் கொண்ட ஈச்வர ஞானம் எனக்கு இல்லை என்றபடி. “ந பக்திமான்-பக்தியுடையேனல்லேன்”பக்தி இல்லை என்று சொல்ல வேண்டாவே அன்றோ, மேற்சொல்லிய அவை இரண்டும் உண்டானால் வருமதுவே அன்றோ அது. அவை இரண்டும் இல்லாமையாலே, பக்தியும் இல்லை என்கிறார் என்றபடி. ‘நோன்பிலேன்’ என்ன அமையாதோ? ‘நோற்ற நோன்பிலேன்’ என்ன வேண்டுமோ? என்ன, சாதனங்களைச் சமைய அநுஷ்டித்து, பலத்தோடே கூடியிருப்பதாகப் பார்த்திருக்கலாவது ஒன்று இல்லை என்கைக்காகச் சொல்லுகிறார். என்றது, 3சக்கர்வர்த்தி, ஸ்ரீ வசுதேவரைப் போலே பேற்றுக்கு அடியாக நினைத்திருக்கலாவது ஒன்றில்லை என்றபடி. “ந தர்மநிஷ்டோஸ்மி -

____________________________________________________

1. “ஆத்மவேதீந” என்றதற்கு, ஆத்மாவை அறிந்த ஸ்வபாவன் அல்லன்
   என்று பொருளாய். அதனை எடுத்துக் கழிக்கிறபோதே, அதிலே சிறிது
   சம்பந்தம் உண்டு என்று தோற்றுகையாலே, ‘தாச்சீல்யம் தோன்ற
   இருப்பன்’ என்கிறார். தாச்சீல்யம் தோன்ற இருப்பன் - ஞானஸ்வபாவனான
   ஆகாரம் தோற்ற இருப்பன். அது தானும் இல்லை - அந்த ஞானசீலதையும்
   இல்லை. தாச்சீல்யம் - அதனுடைய ஸ்வபாவம்.

2. இந்த ஆத்ம ஞானத்திலே சிறிது சம்பந்தம் உண்டு என்றதுதான்
  போராதோ? என்கிற சங்கையிலே, அல்ப ஞானம், லௌகீக ஞானத்தோடு
  கூடியதாகையாலே அஞ்ஞானத்திற்குச் சமமாக இருக்கும் என்பதற்குப்
  பிரமாணம் காட்டாநின்றுகொண்டு, ‘தாச்சீல்யம் தோன்ற இருப்பன், எனக்கு
  அது தானும் இல்லை’ என்றதனை விவரிக்கிறார். ‘அந்தப் பரமனைப் பற்றிய’
  என்று தொடங்கி.

  “தத் ஞானம்; அஜ்ஞானம் அத: அந்யத்உக்தம்”
 
  என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 6. 5 : 57.

3. அப்படிப் பார்த்திருந்த பேர் உண்டோ? எனின், அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘சக்கரவர்த்தி’ என்று தொடங்கி. சக்கரவர்த்தி - தசரத
  சக்கரவர்த்தி.