முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
286

அம

அம்மானே - அரவினை அணையாகவுடைய சர்வேச்வரனே! 1பாம்பினைப் படுக்கையாகவுடைமை, அறப்பெரியவனாந்தன்மைக்கு இலக்கணமே அன்றோ. 2உன்னுடைய போகப் பிராவண்யம் என்னால் ஆறி இருக்கலாயிருக்கிறதோ? நீ பரமபோகியாயிருக்க, என்னால் ஆறியிருக்கப்போமோ?

    சேற்றுத் தாமரை செந்நெலூடு வளர் சிரீவரமங்கல நகர் - சேறுகளிலே தாமரைகளானவை செந்நெலூடே அவற்றுக்கு அணுக்கன் இட்டாற்போலே அலராநிற்கின்ற தேசம். 3“நித்தியஸூரிகளுடைய நகரம் அயோத்தி என்னும் பரமபதம்” என்னும்படியான பரமபதத்திற் காட்டில் தனக்கு நகரமாக விரும்பி வாழ்கின்ற தேசம். சம்சாரிகளுடைய இரக்ஷணத்துக்காக நித்தியவாசம் செய்யும் தேசம். பரமபதத்தையும் மறக்கச் செய்யும் தேசம் என்பார் ‘சேற்றுத்தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கல நகர்’ என்கிறார். 4அன்றிக்கே, அரசர்கள் எடுத்துவிட்ட இடத்தே பரிகரமும் புகுமித்தனையன்றோ என்னுதல்.

    வீற்றிருந்த-‘அங்கே இருக்கக்கூடிய நமக்கு, இவ்விருப்பு இருக்க வேண்டாநின்றதே!’ என்னும் வெறுப்போடு அன்றிக்கே, 5தட்டியிலிருந்தவன் முடி சூடினாற்போலே தன் வேறுபாடு தோற்ற இருக்கை. எந்தாய் - அங்குத்தை இருப்பு நித்தியசூரிகளுக்கு ஆனாற்போலே, இவ்விருப்பு எனக்காக அன்றோ இருக்கிறது. சிரீவரமங்கல நகரான

____________________________________________________

1. “அரவின் அணை அம்மான்” என்பது, பூர்த்தியைச் சொல்லும்படி
   யாங்ஙனம்? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘பாம்பினைப்
   படுக்கை’ என்று தொடங்கி.

2. “அரவின் அணை அம்மான்” என்பதற்கு, இனிமையைப் பற்ற வேறும் ஒரு
   பாவம் அருளிச்செய்கிறார் ‘உன்னுடைய’ என்று தொடங்கி. அதனை
   விவரணம் செய்கிறார் ‘நீ பரமபோகியாய்’ என்று தொடங்கி.

3. “தேவாநாம்பூ: அயோத்யா” என்பது. இது, “நகர்” என்றதற்கு, பாவம்.

4. தாமரையையும் செந்நெல்லையும் வர்ணிப்பதற்கு வேறு ஒரு பாவம்
  அருளிச்செய்கிறார் ‘அன்றிக்கே’ என்று தொடங்கி. என்றது, சர்வேச்வரன்
  வந்து அவதரிக்கையாலே நித்தியசூரிகளும் அவற்றின் உருவமாக வந்து
  அவதரித்திருக்கின்றார்களாகையாலே, அவனைப் போன்றே உத்தேஸ்யமாய்
  வருணிக்கிறார் என்றபடி.

5. தட்டி - சிறைச்சாலை.