முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
287

அங

அங்கே வீற்றிருந்த எந்தாய்! என்க. உனக்கு மிகை அல்லேன் - பரமபதத்திலே நெடுங்கைநீட்டாக இருந்தாயாகில் நான் தரித்திருக்கலாயிற்றே, எனக்காக வந்த இடத்தை நான் இழக்கவோ. அங்கே வீற்றிருந்த உனக்கு மிகை அல்லேன் - 1காக்கும் பொருள்களைத் தேடிக்கொண்டிருக்கின்ற உனக்குப் புறம்பு அல்லேன். அன்றிக்கே, உனக்கு மிகை அல்லேன் - 2“என்னை அடியவனாகக் கொள்வதில் சேவ்ய சேவக பாவம் மாறாடிக் கிடக்கிறது இல்லை” என்று, மற்றைப் போதைக்கு நான் இரேன். என்றது, உனக்கு மிகையானபோது அல்லேனாய் விடுவேன் என்றவாறு. 3இத்தால் தமக்கு இலாபம் என்? என்ன, அங்கே 4“தேவரீருக்கே பிரயோஜனம் கிடைக்கப் போகிறது” என்கிறபடியே, இத்தால் வரும் பிரயோஜனமும் தேவரீருடையதே. 5பால்குடிக்கும் குழந்தையை, பால்குடித்து வயிறு நிறையக்கண்டு உகக்கும் தாயைப் போலே, அடிமை

_____________________________________________________ 

1. “அங்கே வீற்றிருந்த உனக்கு மிகை அல்லேன்” என்பதற்கு, இரண்டு
   வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார். ஒன்று, எந்தையாய்
   அண்மையிலிருப்பவனான உனக்கு மிகையல்லேன் என்பது. என்றது, உன்
   ரக்ஷணத்துக்குப் புறம்பு அல்லேன் என்றபடி. இதனையே
   அருளிச்செய்கிறார் ‘காக்கும் பொருள்களை’ என்று தொடங்கி.
   இரண்டாவது பொருளை அருளிச்செய்கிறார் ‘அன்றிக்கே’ என்று
   தொடங்கி. இரண்டாவது பொருளுக்குக் கருத்து, உனக்குப் புறம்பாய்த்
   தோற்றிற்றாகில் தரியேன் என்பது. அல்லேன் - தரியேன்.

2. மிகையானால் தரியேன் என்னுமதனைத் திருஷ்டாந்த மூலமாகக்
  காட்டுகிறார் ‘என்னை அடியவனாக’ என்று தொடங்கி.

  “குருஷ்வ மாம் அநுசரம் வைதர்மம் நேஹ வித்யதே
   க்ருதார்த்த : அஹம் பவிஷ்யாமி தவச அர்த்த: ப்ரகல்பதே”

  என்பது, ஸ்ரீராமா. அயோத். 31 : 32. பெருமாளைப் பார்த்து
  இளையபெருமாள் கூறியது.

3. ‘இத்தால்’ என்றது, மிகையாகத் தோற்றாமல் அடிமைகொண்ட இதனால்
  என்றபடி.

4. “அங்கே” என்பதற்கு, வேறும் ஒருபொருள் அருளிச்செய்கிறார்
  ‘தேவரீருக்கே’ என்று தொடங்கி. “தவச அர்த்த: ப்ரகல்பதே” என்பதன்
  பொருள், ‘தேவரீருக்கே’ என்றது முதல் ‘கிடைக்கப் போகிறது’ என்றது
  முடிய.

5. இவரை அடிமை கொள்வது அவன் பேறாயிருக்கும் என்னுமதனைத்
  திருஷ்டாந்த முகத்தால் காட்டுகிறார். ‘பால்குடிக்கும்’ என்று தொடங்கி.