|
ய
யாக இருப்பவன் ஸ்வரூபம் பெற்று அடிமைசெய்கை சேஷிக்குப்
பேறே அன்றோ.
(1)
510
அங்குற் றேனலேன் இங்குற் றேனலேன் உன்னைக்காணும்
அவாவில் வீழ்ந்துநான்
எங்குற் றேனுமலேன் இலங்கைசெற்ற அம்மானே!
திங்கள் சேர்மணி மாடநீடு சிரீவர மங்கல
நகருறை
சங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே.
பொ-ரை :-
ஒரு சாதனத்தைச் செய்து முக்தியை அடைந்தவனாயிருக்கிறேன் அல்லேன், சாதனத்தைச்
செய்கின்றவர்களில் ஒருவனாயிருக்கிறேன் அல்லேன், உன்னைக் காண வேண்டும் என்கிற ஆசையிலே
அகப்பட்டு நான் உபாயங்களைச் செய்வதற்கு ஆற்றலுடையேனும் அல்லேன்; இலங்கையை அழித்த அம்மானே!
சந்திரமண்டலம் வரையிலும் பொருந்தும்படி மாணிக்கங்கள் பதித்த மாடங்கள் உயர்ந்திருக்கின்ற
ஸ்ரீவரமங்கல நகரிலே எழுந்தருளியிருக்கின்ற சங்கினையும் சக்கரத்தினையுமுடையவனே! வேறு துணை இல்லாத
எனக்குக் கிருபை செய்தருள வேண்டும்.
வி-கு :- அம்மானே!
சங்குசக்கரத்தாய்! அங்குற்றேனல்லேன், இங்குற்றேனல்லேன், ஆசையில் வீழ்ந்து
எங்குற்றேனுமல்லேன், தமியேனுக்கு அருளாய் என்கிறார். திங்கள்சேர் என்பதற்கு, சந்திரன்
வந்து தங்கியிருக்கும்படியாக என்று பொருள் கூறலுமாம். மணி - அழகுமாம்.
ஈடு :- இரண்டாம் பாட்டு. 1“ஆற்றேன்”
என்றால் பெற்றது என், தடைகள் இன்னம் உண்டே? என்ன, பிராட்டிக்கு வந்த தடைகளைப்
போக்கியது போன்று, அடியேனுடைய விரோதியையும் போக்கியருள வேண்டும் என்கிறார்.
அங்குற்றேன் அல்லேன் - 2முக்தர்
இந்தச் சம்சாரத்திலே உலாவினாற்போன்று சித்தசாதனனாய்த் திரிகிறேன்
____________________________________________________
1. “இலங்கை செற்ற அம்மானே” என்றதனைக்
கடாக்ஷித்து அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
2. உபாசகர்,
ஆரப்தயோகர் என்றும், ஆரூடயோகர் என்றும் இரு வகையர்.
அவர்களில் ஆரூடயோகர் படி தமக்கு
இல்லை என்கிறார் என்று கூறத்
திருவுள்ளம்பற்றி அதனை அருளிச்செய்கிறார் ‘முக்தர்’ என்று
தொடங்கி.
‘சித்தசாதனனாய்’ என்றது, சாதனங்கள் எல்லாம் அநுஷ்டித்துப் பலத்தினை
அநுபவிப்பதற்காக அங்கே செல்ல இருக்கிற ஆரூடயோகனாய் என்றபடி.
|