|
என
என்று-உயர்ந்த பிறவி
ஆசாரம் ஞானம் இவைகள் ஒன்றும் இன்றிக்கே இருக்கின்ற யானையானது 1முற்பிறவியின்
வாசனையாலே, முட்பாய்ந்தவாறே ‘அம்மே!’ என்பாரைப் போலே நோவுபட்டவாறே திருவடிகளை நினைக்க,
சர்வாதிகனான தான் தன் மேன்மை பாராமல் மடுவின் கரையிலே அரைகுலையத் தலைகுலைய வந்து
காப்பாற்றிய நீர்மையை நினைத்து, ‘இது ஓர் உபகாரம் இருக்கும்படியே!’ என்று அந்த உபகாரத்தின்
நினைவாலே அன்புள்ளவர்கள் சொல்லும் பாசுரத்தை அன்பு இல்லாத நான் சொன்னேன்.
கை தலை பூசல் இட்டே
- 2தலையிலே கையை வைத்து வாயாலே கூப்பிட்டு என்னுதல்; மாறாதே அஞ்சலி செய்து என்னுதல்;
தலையிலே வைத்த கை மாறாமல் என்னுதல். மெய்ம் மாலாய் ஒழிந்தேன் - 3யானைக்கு
உதவினது தங்களுக்கு உதவி செய்தது என்று இருக்கும் பரசம்ருத்தியேகப் பிரயோஜநர் அந்த உபகாரத்திற்குத்
தோற்று உபகாரத்தின் நினைவாலே அஞ்சலி செய்து சொல்லும் பாசுரத்தை, மனத்தொடு படாமலே
சொல்லி அது நெஞ்சிலே ஊற்றிருந்து பொய்ம் மால் போய் மெய்ம் மாலாய் விழுந்தது. நன்று;
அவன் உம்மளவில் செய்தது என்? என்ன, அருளிச்செய்கிறார் மேல்: எம்பிரானும் என் மேலோனே-எனக்கு
உபகாரகனானவனும், கலியர் சோறு கண்டாற்போலே என் பக்கலிலே வந்து மேல் விழுந்தான். என்றது,
நான் மெய்
____________________________________________________
1. “விலங்கு நினைத்தல்
கூடுமோ?” என்னும் வினாவிற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘முற்பிறவியின்’ என்று தொடங்கி.
2. “கை தலை பூசல் இட்டே”
என்றதற்கு, மூன்று வகையாகப் பொருள்
அருளிச்செய்கிறார். முதற்பொருள், பூசலிடுதல்-கூப்பிடுதல்.
இரண்டாவது
பொருள், பூசலிடுதல் என்பது, கூட்டுகையாய் தலையிலே கையையும்
கையையும் கூட்டி அஞ்சலி
செய்து என்றபடி. மூன்றாவது பொருள், தம்
எளிமை தோன்றக் கையைத் தலைமேலே கூட்டி வைத்து என்றபடி.
“இட்டே” என்ற ஏகாரத்திலே நோக்காக ‘மாறாமல்’ என்கிறார்.
3. “கைம் மா துன்பொழித்தாய்”
என்றதனைக் கடாக்ஷித்து “மெய்ம் மாலாய்
ஒழிந்தேன்” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார்
‘யானைக்கு’ என்று
தொடங்கி. பரசம்ருத்தியேகப் பிரயோஜநர்-பிறருக்கு வந்த நன்மைகளையே
தமக்கு
வந்ததாக நினைப்பவர்கள்; நித்திய சூரிகள். ‘மனத்தொடு படாமலே
சொல்லி’ என்றது, இத்திருப்பதிகத்தின்
முதற்பாசுரத்தைத் திருவுள்ளம்பற்றி.
|