|
இலங
இலங்கை செற்ற அம்மானே
- 1தம் தலையில் ஒன்றும் இல்லாமையைக் கண்டார், ஒன்றும் இல்லாதார் பெற்ற இடத்தைப்
பார்க்கிறார்; கைம்முதல் அற்றவன் முன்பு ஈட்டி வைத்த செல்வத்தை வாங்கிப் பார்க்குமாறு
போலே. 2தன்பேறாகக் கொள்ளுமவன் என்பார் ‘அம்மானே!’ என்கிறார்.
3அன்றிக்கே, ஸ்வரூபம் பிரகாசித்தால், அவன் தலையிலே தள்ளிவைக்கவுங்கடவதாய்,
அவனும் பிராட்டிமாரைப் போன்று மேல் விழுந்து விரோதிகளையும் போக்கி அணைக்கைக்கு வேண்டும்
சம்பந்தம் உண்டாய்க் காணும் இருப்பது என்னுதல். நன்று; அவை எல்லாம் செய்தமை உண்டு, ஆனாலும்,
4அதற்குப் பிற்பட்டதே? என்ன, அக்கண்ணழிவு அறுத்துவைத்தாய் அன்றோ என்கிறார்
மேல்:
திங்கள் சேர் மணி
மாட நீடு சிரீவரமங்கலநகர் உறை-சந்திரமண்டலம்வரை செல்ல உயர்ந்து இரத்தினமயமான மாடங்களையுடைய
சிரீவரமங்கல நகரிலே, அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே நித்தியவாசம் செய்கின்றாயில்லையோ?
நீடுகை - நீட்சியையுடைத்தாயிருக்கை. அன்றிக்கே, திங்கள் சேர் மணிமாடம் நீடு என்பதற்கு,
சந்திரனோடே சேரும்படி மாணிக்க மயமான மாடங்கள் வளர்கின்ற என்னுதல். அது அப்படியேயானாலும்
பரிகரம் இல்லையே? என்ன, சங்கு சக்கரத்தாய் - அங்ஙன் கண்ணழிவு சொல்லலாமோ? ஒரோ
5கைக்குப் படை
____________________________________________________
1. “அங்குற்றேனல்லேன் இங்குற்றேனல்லேன்”
என்பதற்கு, அருளிச்செய்த
இருவகைப் பொருள்களுள் முதற்பொருளுக்குத் தகுதியாகச் சங்கதி
அருளிச்செய்கிறார்
‘தம் தலையில்’ என்று தொடங்கி. இதனால், உம்மையே
உபாயமாக அறுதியிட்டிருந்த பிராட்டிக்கு
உதவியது போன்று, எனக்கு
நீயே உதவ வேண்டும் என்பதனைத் தெரிவித்தபடி. இதற்குத் திருஷ்டாந்தம்
அருளிச்செய்கிறார் ‘கைம்முதல்’ என்று தொடங்கி.
2. “அம்மானே” என்றதற்கு,
பாவம் அருளிச்செய்கிறார் ‘தன் பேறாக’ என்று
தொடங்கி.
3. பிராட்டிக்கு உதவியது
போன்று, தமக்கும் உதவ வேண்டும்படியான
சம்பந்தத்தை நினைத்து “அம்மானே” என்கிறார் என்று வேறும்
ஒரு கருத்து
அருளிச்செய்கிறார் ‘அன்றிக்கே’ என்று தொடங்கி.
4. அதற்கு - ஸ்ரீராமாவதாரத்துக்கு.
கண்ணழிவு - குறைவு.
5. கை -
போரும், கையும். படை - ஆயுதமும், சேனையும்.
|