முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
294

511

511

கருளப் புட்கொடி சக்க ரப்படை வான நாட!எம் கார்முகில் வண்ணா!
பொருளல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்!
தெருள்கொள் நான்மறை வல்லவர் பலர்வாழ் சிரீவர மங்கல நகர்க்கு
அருள்செய் தங்கிருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே.

   
பொ-ரை :- கருடக் கொடியினையும் சக்கரப்படையினையுமுடைய வைகுந்த நாடனே! எம் கார்முகில் வண்ணனே! பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அடிமைகொண்டாய்; நான்மறைகளிலும் வல்லவர்களான தத்துவ ஞானத்தையுடைய ஸ்ரீவைஷ்ணவர்கள் பலர் வாழ்கின்ற ஸ்ரீவரமங்கலநகரத்திற்குத் திருவருளைச்செய்து அங்கே தங்கியிருக்கின்றவனே! ஒரு பிரதியுபகாரத்தை யான் அறியேன் என்கிறார்.

    வி-கு :-
வானநாட! கார்முகில்வண்ணா! அங்கு இருந்தாய்! என்னை அடிமைகொண்டாய்; அதற்கு ஒரு கைம்மாறு அறியேன் என்க. வெம் கார்முகில் வண்ணா! என்றுகொண்டு விரும்பப்படுகின்ற கரிய மேகம் போன்ற நிறத்தையுடையவனே! என்னலுமாம். வெம்மை-விருப்பம். “வெம்மை வேண்டல்” என்பது தொல்காப்பியம். தெருள்-ஞானம். வல்லவர்: முற்றெச்சம்.

    ஈடு :-
மூன்றாம் பாட்டு. 1“அருளாய்” என்றீர், அருளக்கடவோம், அதில் ஒருதட்டு இல்லை; ஆனாலும், 2“ஆன்மா

____________________________________________________

1. தம் உபாய சூந்யதையைச் சொல்லி, ‘நீயே காப்பாற்ற வேண்டும்’ என்று
  பிரார்த்திக்கின்ற இவ்விடத்திற்கு, “அடிமை கொண்டாய்”, “அறியேன்
  ஒருகைம்மாறே” என்கிறது சேராது என்கிற சங்கையிலே, இது, முன்பு
  செய்ததற்கு ஒரு பிரதியுபகாரம் அறியேன் என்கிறதைச் சொல்லுகிறது
  என்னுமிடம் தோன்ற அவதாரிகை அருளிச்செய்கிறார் ‘அருளாய் என்றீர்’
  என்று தொடங்கி.

2. “சாஸ்த்ரபலம் ப்ரயோக்தரி”

  என்பது, பூர்வமீமாம்சை.

  “கர்த்தா ஸாஸ்த்ரார்த்தவத்த்வாத்”

  என்பது, உத்தரமீமாம்சை.

      ‘மேலுற்றைக்கிட்ட மரியாதையோ’ என்றது, “அருள்செய் தங்கிருந்தாய்”
  என்றதனைத் திருவுள்ளம்பற்றி. ‘கீழுற்றைக்கும்’ என்றது, “பொருளல்லாத
  என்னைப் பொருளாக்கி” என்றதனைத் திருவுள்ளம்பற்றி. ‘ஆன பின்னர்’
  என்றது, முன்பு இன்றியே இப்போது உண்டான பின்பு என்றபடி.