|
வ
விரும்பாமல் இருக்கவே,
அவர்கள் பக்கல் தண்ணளியாலே வந்திருந்தவனே! இதனால், 1அங்குள்ளார்க்குத் தன்னைக்
கொடுத்துக்கொண்டிருக்கிற இருப்பு, தன்பேறாக இருக்கிறபடி. அன்றிக்கே, 2என்னை
அடிமை கொள்ளுகைக்காக அங்கே வந்திருந்தாய் என்றுமாம். 3‘கைங்கர்யத்தளவும் வர
நிறுத்தினோம், இனி அதற்குப் பிரிவு வர ஒண்ணாது’ என்று அங்கே வந்திருந்தாய். ஒரு கைம்மாறு
அறியேன் - நீ இவ்வளவாக உபகரித்து நின்ற இதற்கு, நான் ஒன்று செய்தேனாக அறிகின்றிலேன்.
4இதற்கு முன்னர் உதவி செய்வதற்கு ஒரு காரணம் என் பக்கலிலே உண்டு என்று
சொன்னாயாதல், இனியும் நீயே நிர்வஹித்தாயாதல் செய்ய வேணும். 5‘நீர் உள்ளீராகையாலே
செய்தோம்’ என்றும் சொல்லலாவதில்லை உன்னால். பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அன்றோ
அடிமை கொண்டது.
(3)
512
மாறுசேர்படை
நூற்றுவர்மங்க ஓர்ஐவக் காயன்று மாயப் போர்பண்ணி
நீறுசெய்த எந்தாய்!
நிலம்கீண்ட அம்மானே!
தேறுஞானத்தர் வேத
வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர்
ஏறி
வீற்றிருந்தாய்! உனைஎங்கு எய்தக் கூவுவனே?
____________________________________________________
1.
நகரிலுள்ளார்க்கு அருள் செய்திருந்தால், தமக்கு வந்தது என்? என்ன,
அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘அங்குள்ளார்க்கு’ என்று தொடங்கி.
2. இரண்டாவது பொருளில்,
சிரீவரமங்கலநகரான அங்கே என்று கொள்க.
அப்பொழுது, நான்காம் வேற்றுமையுருபிற்குப் பொருள்
இல்லை.
3. “அடிமை கொண்டாய்”
என்று மேலே சொல்லியிருக்க, இங்கு அடிமை
கொள்ளுகைக்காக வந்திருக்கையாவது யாது? என்ன, அதற்கு
விடை
அருளிச்செய்கிறார் ‘கைங்கர்யத்தளவும்’ என்று தொடங்கி.
4. ஆகில், செய்ய அடுப்பது
யாது? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘இதற்கு முன்னர்’ என்று தொடங்கி. என்றது, நீ
செய்ததற்குப் பிரதியுபகாரம்
அறியேன் என்கையாலே, இனியும் நீயே செய்ய வேண்டும் என்பது
கருத்து.
5.
‘காரணம் இல்லை’ என்பது என்? ‘நீர் உள்ளீராகையாலே செய்தோம்’
என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘நீர் உள்ளீராகில்’ என்று
தொடங்கி.
|