|
பு
புருஷார்த்தத்திற்கு உபாயமாகச்
சொல்லுகிறவற்றில் தாம் ஒன்றும் கனாக்கண்டு அறியாதே இருக்கிறபடியையும், ‘புருஷார்த்தம் வேணும்’
என்னும் நினைவும் இன்றிக்கே இருந்தபடியையும், சம்சாரத்திலே தரைகாண ஒண்ணாதபடி ஆழ்ந்து நோவுபடாநிற்கச்
செய்தே ‘நோவுபடாநின்றோம்’ என்று அறிவிக்கவும் மாட்டாதே உணர்த்தி அற்று இருக்கிறபடியையும்,
அமுதம் இருக்க விஷத்தை விரும்புவாரைப் போலே ஆராவமுதை விட்டு இனிய அமுதம் என்னும்படி இனியபொருளாகத்
தோன்றின ஐம்புல இன்பங்களை விரும்பிப் போந்தபடியையும், அதற்கு மேலே அவன் பக்கல் இச்சை
இன்றிக்கே இருக்க அவனை உகந்தார் சொல்லும் வார்த்தைகளைச் சொல்லிப் போந்த படிகளையும் நினைத்து,
இப்படி எல்லாவகைகளாலும் தண்ணியேனாய் இருக்கிற என்னை, அவற்றுள் ஒன்றனையும் பாராமல், ‘தான்
சர்வசேஷி’ என்னுமிடத்தையும் ‘தன் திருவடிகளில் கைங்கர்யமே புருஷார்த்தம்’ என்னுமிடத்தையும்
என் நெஞ்சிலே படுத்தி என்பக்கலிலே ஆராக் காதலனாய் என்னோடே வந்து கலந்தான் என்று தாம்
பெற்ற பேற்றினைச் சொல்லிப் பேருவகையர் ஆகிறார்.
_______________________________________________
அதற்கு உறுப்பாய்’ என்று தொடங்கியும்,
“புறமே புறமே ஆடி”
என்றதனைத் திருவுள்ளம்பற்றி ‘அநாதி காலம்’ என்று தொடங்கியும், “நின்
கண்
நெருங்கவைத்தே என தாவியை நீக்க கில்லேன்” என்றதனைத்
திருவுள்ளம்பற்றிப் ‘புருஷார்த்தத்திற்கு’
என்று தொடங்கியும், “நாவாய்
போல்” என்றதனைத் திருவுள்ளம்பற்றிப் ‘புருஷார்த்தம் வேணும்’
என்று
தொடங்கியும், “அலைநீர்க் கடலுள் அழுந்தும்” என்றதனைத்
திருவுள்ளம்பற்றிச் ‘சம்சாரத்திலே’
என்று தொடங்கியும், “உள்ளன
மற்றுளவா” என்றதனைத் திருவுள்ளம்பற்றி ‘அமுதம் இருக்க’ என்று
தொடங்கியும்,
“போனாய் மாமருது” என்றதனைத் திருவுள்ளம்பற்றி
‘அதற்கு மேலே’ என்று தொடங்கியும் அருளிச்செய்கிறார்.
‘தான் சர்வ
சேஷி’ என்றது, “அம்மான் ஆழிப்பிரான்” என்றதனைத் திருவுள்ளம் பற்றி.
“உய்ந்தொழிந்தேன்”
என்றதனைத் திருவுள்ளம்பற்றித் ‘தன் திருவடிகளில்’
என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.
“அடியேனோடும் ஆனான்” “என்னை
முற்றவும் தானானான்” என்பனவற்றைத் திருவுள்ளம் பற்றி
‘ஆராக்காதலனாய்’
என்கிறார்.
‘நான் புத்தி பூர்வம்
செய்து போந்த பிராதிகூல்யங்களை மறந்து’
என்றது, (மேலே, பக்கம் - 2. வரி - 8.) மறக்காவிட்டால்,
“அடியேனொடும்
ஆனான்” என்னக்கூடாமையாலே, ‘மறந்து’ என்பது பொருளாற்றலால்
போதரும். பிராதிகூல்யங்கள்
- தீய செயல்கள்.
|