முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
30

New Page 1

சொன்ன அன்றோடு பொய் சொன்ன அன்றோடு வாசி அற என்றும் ஒக்க மெய்ம் மாலாய்ப் போருகின்றவன் விடுவானோ என்றபடி. 1இது இருந்த படியால், எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர் - எவ்வளவு மஹாபாவத்தைப் பண்ணினார்க்கும் பகவானுடைய கிருபை பெருகாநின்றுள்ள இடத்தில் தப்ப விரகு இல்லை அன்றோ? பூசல் இடுதல் - பிரசித்தமாகக் கூப்பிடுகைக்கும், ஒன்றோடு ஒன்று சம்பந்திக்கிறதற்கும் பேர்.

(7)

 450

        மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித் தொழுஉம்
        மாலார் வந்து இனநாள் அடியேன் மனத்தே மன்னினார்
        சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும்
        மேலாத் தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே.


   
பொ-ரை :- மேன்மை பொருந்திய நித்தியசூரிகளாலும் நிலத்தேவர்களாகிய ஸ்ரீவைஷ்ணவர்களாலும் பொருந்தி வணங்கப்படுகின்ற திருமால் ஆனவர், இப்பொழுது அடியேன் மனத்திலே வந்து நிலை நின்றார்; இனிமேல், சேல் போன்ற கண்களையுடைய பெண்களும் பெரிய செல்வமும் சிறந்த புத்திரர்களும் மேலான தாயும் தகப்பனும் அவரே ஆவார் என்க.

   
வி-கு :- நிலத்தேவர்-திருமாலடியார். மன்னுதல்-நிலைபெறுதல். ‘சேல் ஏய்’ என்பதில் ‘ஏய்’ உவம உருபு.

    ஈடு :-
எட்டாம் பாட்டு. 2உபயவிபூதி நாதனானவன் என் பக்கலிலே மேல்விழுந்து என்னை விடாதே மனத்திலே புகுந்திருந்தான்; நானும், இனி நித்தியசூரிகளைப் போலே நித்திய சம்சாரத்தை விட்டு, அவனையே எல்லா உறவு முறையுமாகப் பற்றப் பார்த்தேன் என்கிறார்.

    மேலாத் தேவர்களும் - நித்தியசூரிகளும். நிலத் தேவரும் - பூசுரரான ஸ்ரீ வைஷ்ணவர்களும். மேவித் தொழுஉம்

___________________________________________________

1. “என்மேலானே” என்றதனைக் காரணமாகக் கொண்டு, “எம் மா
  பாவியர்க்கும்” என்றதனை, தொடங்கியதற்கு ஏற்ப முடிக்கிறார் ‘இது
  இருந்தபடியால்’ என்று தொடங்கி.

2. “மேலாத் தேவர்களும், அடியேன் மனத்தே மன்னினார், சேலேய்
  கண்ணியரும்” என்பன போன்றவைகளைக் கடாக்ஷித்து அவதாரிகை
  அருளிச்செய்கிறார். இடையிலே உள்ள ‘நானும் இனி நித்திய
  சூரிகளைப்போலே நித்திய சம்சாரத்தை விட்டு’ என்பது, பொருளாற்றலால்
  பெறப்பட்ட பொருள்.