|
நூற
நூற்றுவர் என்றுமாம்.
“பகைவனுடைய சோற்றைப் 1புசிக்கலாகாது” என்கிறபடியே, தனக்குப் பகைவர்களாக நினைத்திருக்கிறபடி.
மங்க - மாள. 2விளக்குப்பிணம் போலே காண ஒண்ணாதவாறு செய்தபடி. ஓர் ஐவர்க்காய்
- இரண்டு பக்கங்களும் ஒத்திருக்க, 3ஒரு தலையிலே நின்றாயத்தனை அன்றோ. 4உளனான
ஒரு சாரதியும்கூட முதன்மையற்றவனாம்படி தனியரான ஐவர் ஆதலின் ‘ஓர் ஐவர்’ என்கிறது.
ஐவர்க்காய் - 5அவர்களுக்குத் தன்னை வேண்டியவாறு உபயோகப்படுத்திக் கொள்ளவைத்தபடி.
அன்று - போரிலே நோக்குள்ளவர்களாய் வந்த அன்று. மாயம் போர் பண்ணி - ஆச்சரியமான போரைச்
செய்து. அன்றிக்கே, வஞ்சகமான போரைச் செய்து என்னுதல். என்றது, பகலை இரவாக்கியும்,
‘ஆயுதம் எடேன்’ என்று ஆயுதம் எடுத்தும், பகைவர்களுடைய உயிர்நிலையைக் காட்டிக் கொடுத்தும் செய்தமையைத்
தெரிவித்தபடி. நீறு செய்த - 6“கூறாய் நீறாய் நிலனாகி” என்கிறபடியே, சாம்பல்
ஆக்கின.
___________________________________________________
1. த்விஷதந்நம் ந
போக்தவ்யம் த்விஷந்தம் நைவ போஜயேத்
பாண்டவாந் த்விஷஸே
ராஜந் மம பிராணாஹி பாண்டவா:”
என்பது, பாரதம். இது, துரியோதனனைப்
பார்த்துக் கிருஷ்ணன் கூறியது.
“என்னினின்னில் ஒரு”,
“அரவமல்கியபதாகையாய்” என்ற வில்லிபாரதச்
செய்யுள்கள் ஈண்டு ஒருபுடை நோக்கலாகும். (கிருஷ்ணன் தூது. 108, 109.)
2. விளக்குப் பிணம் -
இருட்டு.
3. ‘ஒரு தலையிலே நின்றாயத்தனை
அன்றோ’ என்றது, இரண்டு பக்கமும்
ஒத்த பலமுடைத்தாயிருக்க, கேவலம் கிருபையாலே, தாழ்ந்த
தலையிலே
நின்றாயத்தனையன்றோ என்றபடி.
4. “ஓர் ஐவர்” என்பதற்கு,
தனியரான ஐவர் என்று பொருள்
கூறத்திருவுள்ளம்பற்றி, கிருஷ்ணன் இல்லையோ? என்ற சங்கைக்கு,
விடை
அருளிச்செய்கிறார் ‘உளனான ஒரு சாரதியும்’ என்று தொடங்கி.
‘முதன்மையற்றவனாம்படி’ என்றது,
‘போரிலே ஆயுதம் எடேன்’
என்றதனைத் திருவுள்ளம்பற்றி.
5. “ஆய்” என்றதற்குப்
பொருள் அருளிச்செய்கிறார் ‘அவர்களுக்கு’ என்று
தொடங்கி.
6. “கூறாய் நீறாய் நிலனாகி”
என்றது, திருவாய். 6. 10 : 2.
‘கூறாய் நீறாய் நிலனாகி - முற்பட இரு துண்டமாக்கி, பின்பு நீறாக்கி,
பின்னைத் தறையாக்கும். இப்பொருள்தன்னையே
‘சாம்பலாக்கின’ என்கிறார்.
|