|
513
513
எய்தக்கூவுதல் ஆவ தேஎனக்கு?
எவ்வ தெவ்வத்து ளாயு மாய்நின்று
கைதவங்கள் செய்யும்
கருமேனி அம்மானே!
செய்த வேள்வியர் வையத்
தேவர் அறாச் சிரீவர மங்கலநகர்
கைதொழ இருந்தாய்
அதுநானும் கண்டேனே!
பொ-ரை :- பேற்றினைப் பெறுதற்கு நான் உன்னை அழைத்தல்
எனக்குத் தகுதியாகுமோ? எவ்வகைப்பட்ட பகைவர் கூட்டத்துள் நீயும் ஒருவனாகச் சேர்ந்து புத்தமுனியாய்
நின்று வஞ்சகமாகக் காரியங்களைச் செய்த கரிய மேனியையுடைய அம்மானே! ஐவகையான யாகங்களைச்
செய்தவர்களும் பூதேவர்களுமான ஸ்ரீ வைஷ்ணவர்கள் நீங்காமல் எழுந்தருளியிருக்கின்ற ஸ்ரீ வரமங்கல
நகரிலே எல்லாரும் கைகூப்பி வணங்கும்படியாக எழுந்தருளியிருக்கின்றாய்; அதனை அடியேனும் கண்டேன்.
வி-கு :-
எய்தக் கூவுதல் எனக்கு ஆவதே என்க. தெவ்வத்துள்: தெவ் - பகை. அத்து: சாரியை. உள்: ஏழாம்
வேற்றுமை உருபு. நின்று செய்யும் அம்மான் என்க. வையத்தேவர் - நிலத்தேவர்; ஸ்ரீ வைஷ்ணவர்கள்.
ஈடு :- ஐந்தாம்
பாட்டு. 1அடியார்கள் பக்கலிலே நாம் வைத்திருக்கும் பக்ஷபாதத்தையும் சிரீவரமங்கல
நகரில் இருப்பையும் உமக்குக் காட்டினோமே, “எங்கு எய்தக் கூவுவன்” என்று ஒன்றும் பெறாதாரைப்
போன்று, கூப்பிடாநின்றீரே? என்ன, செய்த அம்சத்தை அறிந்தேன், அதனாலே நிறைவுபெற்றவன் ஆகின்றிலேன்
என்கிறார்.
எய்தக் கூவுதல்
ஆவதே எனக்கு - 2பொகடு, அது
____________________________________________________
1. “கைதவங்கள் செய்யும்
கருமேனி அம்மானே! சிரீவரமங்கல நகர்
கைதொழ இருந்தாய்” என்பன போன்றவைகளைக் கடாக்ஷித்து
அவதாரிகை அருளிச்செய்கிறார். “அது நானும் கண்டேனே”
என்றதனைத் திருவுள்ளம் பற்றிச் ‘செய்த
அம்சத்தை அறிந்தேன்’
என்கிறார்.
2. மேல்
திருப்பாசுரத்தில் “எங்கு எய்தக் கூவுவனே” என்று சாதன
அநுஷ்டானம் செய்யப் போகாது என்றவர்,
மீளவும், “எய்தக் கூவுதல்
ஆவதே எனக்கு” என்று கூறுதல், கூறியது கூறல் ஆகாதோ? என்ன, மேலே
பேற்றுக்குச் சாதன அநுஷ்டானம் செய்ய வேண்டுவதில்லை என்றார்;
இங்கே, அஜ்ஞான அசக்திகளாலே
சாதன
|