|
க
கிடக்கிடாய், 1இந்தத்
திருமகள்கேள்வனைக் கண்ட உனக்கு ‘இவன் சாதன அநுஷ்டானம் பண்ணுவான்’ என்று தோற்றி இராதோ.
2உன்னிலும் என்னை நான் அறிவேனே அன்றோ! என்னால் செய்யலாவது உண்டோ என்று கேட்கிறார்,
3‘அவனாலே பேறு என்றிருக்குமவர் ஆகையாலே’; நீ கைவிட்ட அன்று நான் அநுஷ்டிக்கும்படி,
திருமகள் கேள்வனான உன்னோடு ஒக்க விகல்பிக்கலாம்படி இருந்தேனோ என்கிறார். எய்தக் கூவுதல்
ஆவதே - நீ எனக்குக் கைப்படும்படியாக விரும்புதல் ஆவதே. எனக்கு-வலி இல்லாதான் ஒருவன் தலையிலே
ஒரு மலையை வைத்தாற்போலே இருக்கிறது காணும் இவர்க்கு. 4“என்னை வணங்குவாய்” என்றால்,
பின்னர் இல்லை யாவரே அன்றோதான்.
___________________________________________________
அநுஷ்டானம் செய்ய மாட்டேன் என்னுமதனைக்
குறிப்பால்
உணரும்படியாக அருளிச்செய்கிறாராகையாலே கூறியது கூறலாகாது
என்கிறார் ‘பொகடு’ என்று
தொடங்கும் வாக்கியத்தாலே. ‘பொகடு’ என்ற
சொல்லின் விவரணம், ‘அது கிடக்கிடாய்’ என்பது.
அது கிடக்கிடாய் -
சாதன அநுஷ்டானம் செய்ய வேண்டும் என்பது கிடக்கட்டும். என்றது,
நிர்ஹேதுகமாகச்
சிரீவரமங்கல நகரிலே இருந்தாயாகையாலே பேற்றிற்குச்
சாதன அநுஷ்டானம் செய்ய வேண்டுவதில்லை
என்பது கருத்து.
1. அநுஷ்டிக்கத்தான் வேண்டினாலும்,
அஞ்ஞானத்தாலும் அசக்தியாலும்
அநுஷ்டிக்க மாட்டேன் என்னுமதனைக் குறிப்பாக அருளிச்செய்கிறார்
‘இந்தத் திருமகள் கேள்வனை’ என்று தொடங்கி. “எனக்கு” என்றதிலே
நோக்காக இங்ஙனம்
அருளிச்செய்கிறார். ‘இந்தத் திருமகள் கேள்வனை’
என்றது, விபரீதலக்ஷணையாலே ‘என்னை’ என்பதனைக்
குறித்தபடி.
2. உம்முடைய அசக்தி நமக்குத்
தெரியுமோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘உன்னிலும்’ என்று தொடங்கி. இதுவும்
குறிப்புப்பொருள். என்றது, முற்றறிவினான நீ அறியாததனை நான்
அறிவேனோ? என்றபடி.
3. மேலே குறிப்பால் கூறிப்
போந்த அஜ்ஞான அசக்திகளை வெளிப்படையாக
அருளிச்செய்கிறார் ‘அவனாலே பேறு’ என்று தொடங்கி.
4. அப்படி, மலையை வைத்தாற்போலே
இருக்குமோ? என்ன, வியாக்யாதாவின்
ஈடுபாடு, ‘என்னை வணங்குவாய்’ என்று தொடங்கும் வாக்கியம்.
“மந்மநா பவ மத்பக்தோ
மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவ ஏஷ்யஸி யுக்தா
ஏவம் ஆத்மானம் மத் பராயண:”
என்பது, ஸ்ரீ கீதை, 9: 34.
‘இல்லையாவரே அன்றோதான்’ என்றது, சத்தை
இல்லையாய் விடுவார் என்றபடி.
|