|
ம
மாலார் - 1இளையபெருமாளும்,
இடக்கை வலக்கை அறியாத குரங்குகளும் ஒக்க அடிமை செய்தாற்போல, இரண்டு உலகங்களில் உள்ளவர்களும்
ஒரு மிடறாகச் சேர்ந்து அடிமை செய்யும் சர்வாதிகனானவன். வந்து - தான் இருக்குமிடத்தே நான் செல்லுதல்
தகுதியாக இருக்க, நான் இருந்த இடத்திலே தானே வந்து. இன நாள் - இப்போது, என்றது, முக்கணத்தில்
அறியாது இருக்க, இங்ஙனே விடிந்துகொண்டு நிற்கக் கண்டேன் என்றபடி. இப்படி வருகைக்குக் காரணம்
என்? என்னில், அடியேன்-விட ஒண்ணாத சம்பந்தத்தை இட்டு வந்தான். வந்து செய்தது என்? என்னில்,
மனத்தே மன்னினார் - 2“மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் மலராள் தனத்துள்ளான்”
என்கிறபடியே, பரம யோகிகள் நெஞ்சிலும், திருப்பாற் கடலிலும், பெரிய பிராட்டியார் திருமுலைத்தடங்களிலும்
இருக்கக்கூடிய அவன், நித்திய சம்சாரியாய்ப் போந்த என் நெஞ்சிலே தாவரத்தைப் போன்று நிலைபெற்று
நின்றான்.
இனி, நீர் செய்யப்
பார்த்தது என்? என்ன, இனி, இவனை ஒழிய எனக்கு ஒரு செயல் உண்டோ? என்கிறார் மேல்: சேல்
ஏய் கண்ணியரும் - தங்கள் நோக்காலே துவக்க வல்ல பெண்களும். பெரும் செல்வமும்-நிரவதிகமான
செல்வங்களும். நன்மக்களும் - குணங்களால் மேம்பட்ட புத்திரர்களும். 3மேலாத் தாய்
தந்தையும் - தங்கள் தங்களை அழித்து மாறியாகிலும் குழந்தைகளை நோக்கும் தாய் தந்தையர்களும்
எல்லாம். இனி அவரே ஆவார்-இனி அவரையே எனக்காகப் பற்றப் பார்த்தேன் என்கிறார். துக்கங்களைக்
கொடுக்கக்கூடிய அவர் அவர்களுடைய சம்பந்தத்தால் துக்கப்பட வேண்டா என்பார் ‘அவரே
ஆவார்’ எனப் பிரிநிலை ஏகாரங் கொடுத்து ஓதுகிறார். 4“தாயும் தந்தையும் உடன்
பிறந்தவனும் இருப்பிடமும் காப்பவனும் சிநேகிதனும் மோக்ஷ உலகமும் ஸ்ரீமந் நாராயண
_____________________________________________________
1. நித்தியசூரிகளோடு சம்சாரிகளும்
கலந்து தொழுகின்றமைக்கு
எடுத்துக்காட்டு ‘இளைய பெருமாளும்’ என்று தொடங்கும் வாக்கியம்.
2. மூன்றாந் திருவந். 3.
3. புத்திரர்களை அழிய
மாறி ஜீவிக்கும் தாய் தந்தையர்களை விளக்குகிறது
‘மேலாத் தாய் தந்தை’ என்ற அடைமொழி.
4. சுபால உபநிடதம்.
|