|
அண
அணித்தானவாறே, நஞ்சீயரைப்
பலகாலும் இயல் கேட்டருளுவர்; ஒரு கோடையிலே திருவீதியிலே நீரை விட்டு எழுந்தருளியிருந்து
இப்பாட்டை இயல் சொல்லும் என்று சீயரை அருளிச்செய்து, தாம் இதனை அநுசந்தித்திருந்து பின்பு
தாமும் இப்பாசுரத்தை இயல்சொல்லி, 1‘இயமம் நியமம் முதலிய கிரமத்தாலே தியானம்
செய்யத்தக்க சர்வேச்வரனை மனனம் செய்து புறம்புள்ள பராக்கை அறுத்து அநுசந்திக்கப் புக்காலும்
சுக்கான் பரல் போன்று இருக்கக்கூடிய நெஞ்சுகளைப் பதம் செய்யும்படி, தார்மிகராயிருப்பார் இவை
சில ஈரச்சொற்களைப் பொகட்டுப் போவதே!’ என்று அருளிச்செய்தார்; நஞ்சீயர், இவ்வார்த்தையை
உருத்தோறும் அருளிச்செய்வர்” என்று அருளிச்செய்வர்.
வந்தருளி - நான்
விரும்பாதிருக்க வந்தருளி. வெவ்வேறு தீவுகளிலுள்ள வஸ்துக்கள் இரண்டே அன்றோ சேர்கின்றன.
2பரமபத நிலையனானவனும், சம்சாரத்தை இருப்பிடமாகவுடையவரும். இந்த இருவருமே அன்றோ
___________________________________________________
1. ‘இயமம் நியமம்’ என்பன,
யோக உறுப்புக்களைச் சார்ந்தவை. முதல் பத்து
ஈட்டின் தமிழாக்கம் காணல் தகும். சுக்கான்பரல்
- சுக்கான் பருக்கைக்கல்.
தார்மிகர் - ஆழ்வார்கள். ஈரச்சொற்கள் - பக்தி ரசமான திருவாய்மொழி
முதலான பிரபந்தங்கள். ‘அருளிச்செய்வர்’ என்றது, நம்பிள்ளையை.
“வானவர் கொழுந்து வந்தருளி”
என்கையாலே, அதிதூரத்திலிருக்கின்றவன்
சம்சாரியான தான் இருந்தவிடத்தே வந்தான் என்று ஈடுபட்டமையும்,
“கொழுந்து” என்கையாலே, அவர்களுக்கும் ஆதரணீயன் ஆகையாலே,
சேஷியானவன் சேஷபூதன் இருந்தவிடத்தே
வந்தான் என்று
ஈடுபட்டமையும் தோற்றுகையாலே அவ்விரண்டனையும் உட்கொண்டு
அருளிச்செய்கிறார்
‘வெவ்வேறு தீவுகளில்’ என்று தொடங்கி.
இங்கு,
வளைபயில் கீழ்கடல் நின்றிட
மேல்கடல் வானுகத்தின்
துளைவழி நேர்கழி கோத்தெனத்
தில்லைத்தொல் லோன்கயிலைக்
கிளைவயி னீக்கியிக் கெண்டையங்
கண்ணியைக் கொண்டுதந்த
விளைவையலால் வியவேன்
நயவேன் ஒருதெய்வம் மிக்கனவே.
என்ற அருமைச் செய்யுள் ஒரு புடை
ஒப்பு நோக்கலாகும்.
(திருக்கோவையார், 6).
2. விவரணம்
செய்கிறார் ‘பரமபத நிலையனானவனும்’ என்று தொடங்கி.
இப்படி ஈடுபாடாக அருளிச்செய்ததற்குக்
காரணம் யாது? என்ன, விடை
அருளிச்செய்கிறார் ‘வந்தருளி’ என்று தொடங்கி. நெஞ்சுளுக்கி -
ஈடுபட்டு.
|