|
1ஸ்ரீ
1ஸ்ரீ
வைகுண்டம் கலவிருக்கையாகவுடையவன் என் நெஞ்சு பெறுகைக்குக் காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவன்
ஆவதே! என்றது, நித்திய சூரிகளுக்குத் தலையானவன் அன்றோ நித்திய சம்சாரிகளுக்குத் தலையான
என் நெஞ்சு பெறுகைக்குப் பிரார்த்திக்கிறான் என்றபடி. உலகுக்கு ஓர் முந்தைத் தாய் தந்தையே
- உலகத்துக்கு 2அத்விதீயனாய்ப் பழையனான தாயும் தமப்பனுமானவன். 3அங்கு
இரண்டு தலையும் கூடி வருமே அன்றோ, இங்கு வெறும் ஒரு தலையேயாயிருக்கிறபடியைத் தெரிவித்தவாறு.
4“உயிர்களுக்கு எவன் அழியாத தந்தையோ” என்கிறபடியே, நாலு நாட்கள் மணற்கொட்டகம்
இட்டு விளையாடுமாறு போலே அழியும் தாயும் தமப்பனும் அன்றோ அவர்கள், ஒருநாளும் அழியாத மாதா
பிதாக்கள் அன்றோ இவர்கள். 5“மனிதர்களில் சிறந்தவர்களே! உலகங்களில்
___________________________________________________
1. “வானவர் கொழுந்து” என்றதனைக்
கடாக்ஷித்து, “இடம் கொண்ட”
என்பதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘ஸ்ரீ வைகுண்டம்’ என்று தொடங்கி.
2. ‘அத்விதீயன்’ என்றது,
ஈரரசு இன்மையைத் தெரிவித்தபடி.
3. “உலகு” என்று அஃறிணையாக
அருளிச்செய்ததற்கு, பாவம்
அருளிச்செய்கிறார் ‘அங்கு’ என்று தொடங்கி. என்றது, “வானவர்
கொழுந்து” என்றவிடத்தில், இரண்டு தலைக்கும் சேஷ சேஷி பாவம்
முதலான சம்பந்த ஞானமுண்டாகையாலே,
இரண்டு தலையும் கூடி வரும்.
“உலகுக்கு ஓர் முந்தைத் தாய்தந்தை” என்கிற இவ்விடத்தில், உலகத்தார்க்கு
அறிவின்றியே ஈச்வரன் தானே அறிந்து, இரக்ஷிக்கையாலே வெறும் ஒரு
தலையாயே இருக்கும் என்றபடி.
4. ஈச்வரன், முந்தையான தாயும்
தந்தையுமாக இருப்பதற்குப் பிரமாணம்
காட்டுகிறார் ‘உயிர்களுக்கு’ என்று தொடங்கி.
“பூதாநாம் ய : அவ்யய: பிதா”
என்பது, மஹாபாரதம் ஸஹஸ்ர நாமம்.
இதற்குப் பொருள் அருளிச்செய்கிறார் ‘நாலு நாட்கள்’ என்று
தொடங்கி.
‘இவர்கள்’ என்றது, ஈச்வரனையும் பிராட்டியையும்.
5. சர்வேச்வரனே உலகங்கட்கெல்லாம்
தாய் தந்தையர்கள் என்னுமதற்கு,
வேறும் ஒரு பிரமாணங்காட்டுகிறார் ‘மனிதர்களில்’ என்று தொடங்கி.
“சர்வேஷாம் ஏவ லோகாநாம்
பிதா மாதா ச மாதவ:
கச்சத்வமேநம் ஸரணம்
ஸரண்யம் புருஷர்ஷபா:”
என்பது, மஹாபாரதம் ஆரண்ய
பர்வம். பாண்டவர்களைப் பார்த்து
மார்க்கண்டேயர் கூறியது. இச்சுலோகத்தின் இரண்டாம் அடிக்குப்
பொருள்
‘ஒருதலையாகாமே’ என்று தொடங்குவது.
|