|
இ
இருக்கிற எல்லாப் பிராணிகளுக்கும்
திருமாலானாவர் தாயும் தந்தையுமாக இருக்கிறார்; காப்பாற்றுகின்றவரான இவரை உபாயமாக அடைமின்”
என்றார் மார்க்கண்டேயரும். “கச்சத்வம் - ஒருதலையாகாமே நீங்களும் அவனைப் பற்றப்
பாருங்கோள்.”
முழு ஏழு உலகம் உண்டாய்
- 1மாதாவானவள் பத்து மாதங்கள் வயிற்றிலே வைத்துத் தரிப்பது, ‘பிறந்து வளர்ந்தால்
பின்னை நம்மைப் பாதுகாப்பவனாவான்’ என்னும் பிரயோஜனத்தைப் பற்றவே அன்றோ; இவன் அங்ஙன்
அன்றிக்கே, ‘இவைதாம் நோவுபடாதொழியப் பெற்றோமே’ என்று இதனைத் தன் பேறாக நினைத்திருப்பான்.
செந்தொழிலவர் - 2வேறு பிரயோஜனத்தைக் கருதாத நேர்மையையுடைய தொழில் விசேடத்தையுடையவர்களுடைய.
என்றது, “எனக்கு ஒன்று கொடு, உனக்கு ஒன்று தருகிறேன்” என்னாதவர்கள் என்றபடி. அன்றிக்கே,
அவன் ரக்ஷணம் செய்வதைப் போலே இவர்களும் கைங்கரியம் செய்கின்றவர்கள் ஆதலின் ‘செந்தொழிலவர்’
என்கிறார் என்னுதல். இங்ஙன் அன்றாகில், வியர்த்தம் ஆமே. வேத வேள்வி அறா - வேத ஒலியும்
வைதிக கார்யங்களின் கோலாகலமும் மாறாதே செல்லுகை. 3பிராப்பிய விரோதியாதல்
பிராபகவிரோதியாதல் இல்லாமையாலே, நாய்ச்சி
___________________________________________________
1. உலகிலேயுள்ள தாய்மார்களைக்காட்டிலும்
ஈச்வரனுக்குள்ள
வேற்றுமையினைக் காட்டுகிறார் ‘மாதாவானவள்’ என்று தொடங்கி.
“உண்டாய்” என்று
உணவாகச் சொல்லுகையாலே, இது தன் பேறாக
இருக்கும் என்றபடி.
2. “செம்” என்பதற்கு, வேறு
பிரயோஜனத்தைக் கருதாத செம்மை என்று
பொருள் அருளிச்செய்கிறார் ‘வேறு பிரயோஜனத்தை’ என்று
தொடங்கி.
அன்றிக்கே, சாதன புத்தியாக ஒரு தொழிலைச் செய்யாதவர்கள் என்று
வேறும் ஒரு
பொருள் அருளிச்செய்கிறார் ‘அன்றிக்கே’ என்று தொடங்கி.
‘வியர்த்தமாமே’ என்றது, அநந்யப்
பிரயோஜனத்வ சித்த சாதன
நிஷ்டைகளுக்கு விரோதமாமே என்றபடி.
3. “அறா” என்று நித்தியமாகச் செல்லுகைக்குக் காரணம் யாது? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘பிராப்பிய விரோதி’ என்று தொடங்கி.
என்றது, நாய்ச்சிமாருடைய கலவியைப் போன்று இதுவும்
ஈச்வரனுக்குப்
போக்யமாகையாலே நித்தியமாயிருக்கும் என்றபடி. பிராப்பியம்-பேறு.
பிராபகம்-அதனையடைவதற்குரிய
வழி.
|