|
ம
மாருடைய கலவியைப்
போன்று நித்தியமாய்ச் செல்லாநிற்கும். 1காதலியை அணைக்கிறதற்கு வேறு ஒரு பலம்
உண்டாகில் அன்றோ இதற்கு வேறு ஒரு பலம் உண்டாய் அவ்வளவிலே தலைக்கட்டுவது. சிரீவர மங்கலநகர்
அந்தம் இல் புகழாய் - ஸ்ரீவைகுண்டத்திலே இருந்தானாகில் புகழுக்கு முடிவு உண்டு போலே காணும்.
அடியேனை அகற்றேலே - 2ஒரு தேசத்திலிருந்து மற்றொரு தேசத்திற்குச் சென்று நீ
படைத்த புகழை, ‘வேறு ஒரு கதியும் இல்லாதவனைக் கைவிட்டான்’ என்ற பழி ஆக்கித் தலைக்கட்டுவித்துக்
கொள்ளப் பாராதே கொள்ளாய். 3’அகற்றேல்’ என்பது, அரைக்கணம் தாழ்க்கப்
பொறுக்கமாட்டாமை சொல்லுகிற வார்த்தை. விளம்பம் பொறாதார் சொல்லப் பெறுவர் போலே
காணும். இதனுடைய இரக்ஷணத்தில் உன்னை ஒழிய வேறு ஒரு சம்பந்தம் உண்டாய்த்தான் அகற்றுகிறாயோ
என்பார் ‘அடியேனை’ என்கிறார்.
(7)
516
அகற்ற நீவைத்த மாய
வல்லைம் புலன்களாமவை நன்கறிந்தனன்
அகற்றி என்னையும்நீ
அரும்சேற்றில் வீழ்த்திகண்டாய்
பகர்க்கதிர் மணிமாட
நீடுசிரீவர மங்கை வாண னே! என்றும்
புகற்கரிய எந்தாய்!
புள்ளின்வாய் பிளந்தானே!
பொ-ரை :- உன் பக்கல் அன்பு இல்லாதாரை அகற்றுவதற்காக
உன்னாலே உண்டாக்கி வைக்கப்பட்ட வஞ்சனைபொருந்திய கொடிய ஐந்து இந்திரியங்களான அவற்றை உள்ளவாறே
அறிந்தேன்; அவற்
____________________________________________________
1. இவனுக்கு, மனைவியின்
கலவிபோலே அதுவும் போக்யமாகையாலே
நித்தியமாயிருக்கிறது என்று வேறும் ஒரு காரணம் அருளிச்செய்கிறார்
‘காதலியை’ என்று தொடங்கி. ‘அவ்வளவிலே தலைக்கட்டுவது’ என்றது,
பல சித்தியோடே முடிவது என்றபடி.
2. “அந்தமில் புகழாய்”
என்றதனை, “அகற்றேல்” என்றதனோடு கூட்டி, பாவம்
அருளிச்செய்கிறார் ‘ஒரு தேசத்திலிருந்து’ என்று
தொடங்கி.
3. தம்மை
விடமாட்டாமல் அண்மையிலிருக்கிறவனை “அகற்றேல்” என்பான்
என்? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
“அகற்றேல்” என்று
தொடங்கி. அதனை விவரணம் செய்கிறார் ‘விளம்பம்’ என்று தொடங்கி.
|