|
என
என்கிறபடியே’ நலியா நின்றாலும்
1தாய்முகமே பார்த்துக் கிடக்கும் குழந்தையைப் போலே, 2“வத்யதாம்
- கொல்லுதற்குரியவன்” என்கிற மஹாராஜரையும், அவரிலும் கொடிய முதலிகளையும் அழகிதாகப் பார்த்துக்
கொண்டிருந்த ஸ்ரீ விபீஷணாழ்வான் தெளிவு போன்ற தெளிவினையுடையவர்கள் என்னுதல்.
திருநான்மறைகள்
வல்லார் - 3நூறாயிரம் வரி எழுதியிருந்தாலும் அவற்றிற்போகாமல், தாத்பரியத்தைக்
கிரகிக்குமவர்கள். என்றது, “மாதவன் பேர் சொல்லுவதே ஓத்தின் சுருக்கு” என்றிருக்குமவர்கள்
என்றபடி. மலி தண் சிரீவரமங்கையுள் இருந்த எந்தாய் - அவர்கள் நெருங்கி வசிக்கின்ற சிரமஹரமான
சிரீவரமங்கையிலே அவர்களைப் போன்று இருக்கின்ற என் நாதனே! எனக்கு உய்யுமாறு அருளாய்
4அறச்சென்றற்றது கண்டாய், உன் திருவடிகளில் கைங்கர்யத்தைத் தந்தருள வேணும். 5கைங்கரியம்
____________________________________________________
1. தருதுயரம் தடாயேல்
உன்சரணல்லால் சரண்இல்லை
விரைகுழுவும் மலர்ப்பொழில்சூழ்
விற்றுவக்கோட் டம்மானே
அரிசினத்தால்
ஈன்றதாய அகற்றிடினும் மற்றவள்தன்
அருள்நினைந்தே அழுங்குழவி
யதுவேபோன் றிருந்தேனே.
என்பது, பெருமாள் திருமொழி.
“குழவி அலைப்பினும்
அன்னேயென் றோடும்”
என்பது, நான்மணிக்கடிகை.
2. “வத்யதாம்”
என்பது, ஸ்ரீராமா. யுத்.
3. “வல்லார்” என்றதற்கு,
தாத்பரியத்தைக் கிரஹிக்குமவர்கள் என்று பொருள்
அருளிச்செய்கிறார் ‘நூறாயிரம்’ என்று தொடங்கி.
அதனைப் பிரமாண
முகத்தாலே விவரணம் செய்கிறார் ‘மாதவன்’ என்று தொடங்கி.
ஓத்தின் பொருள்முடிவும் இத்தனையே
உத்தமன்பேர்
ஏத்தும் திறமறிமின் ஏழைகாள்
- ஓத்ததனை
வல்லீரேல் நன்றுஅதனை மாட்டீரேல்
மாதவன்பேர்
சொல்லுவதே ஓத்தின்
சுருக்கு.
என்பது, இரண்டாம் திருவந். 39.
4. “எனக்கு” என்கையாலே,
‘ஏஹிபஸ்ய - இதனைப் பார்த்தருள வேணும்’
என்னுமாறு போன்று, ‘அறச்சென்றற்றது கண்டாய்’ என்கிறார்.
5.
“உய்யுமாறு” என்றால், கைங்கரியத்தைச் சொல்லுமோ? என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார்
‘கைங்கரியம் என்றும்’ என்று தொடங்கி.
|