|
என
என்றும், உய்கை என்றும்
இரண்டு இல்லை இவர்க்கு. விரைந்திலராகில் அவன் வைலக்ஷண்யத்தில் ஞானம் இல்லையாகக் கடவது,
இங்கே கால் பாவிற்றாகில் சம்சாரத்தின் தண்மையில் ஞானம் இல்லையாகக் கடவது.
(9)
518
ஆறெனக்குநின் பாதமே
சரணாகத் தந்தொழிந் தாய் உனக் கோர்கைம்
மாறு நான் ஒன்றிலேன்
எனதாவியும் உனதே
சேறுகொள் கரும்பும்
பெருஞ்செந்நெலும் மலிதண் சிரீவரமங்கை
நாறு பூந்தண்துழாய்
முடியாய்! தெய்வ நாயகனே!
பொ-ரை :-
எனக்கு உபாயம் தருமிடத்தில் உனது திருவடிகளையே
உபாயமாகத் தந்தாய்; அவ்வாறு தந்த உனக்குக் கொடுப்பதற்குரிய பிரதியுபகாரம் நான் ஒன்றனையுடையேனல்லேன்;
என்னுடைய உயிரும் உன்னுடையதே; சேற்றையுடைத்தான கரும்பும் பெரிய செந்நெற்பயிர்களும் மிகுந்திருக்கின்ற
குளிர்ந்த ஸ்ரீ வரமங்கை என்னும் திவ்வியதேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற வாசனை வீசுகின்ற பூக்கள்
பொருந்திய குளிர்ந்த திருத்துழாயைத் தரித்த திருமுடியையுடையவனே! தெய்வங்கட்குத் தலைவனே!
வி-கு :-
துழாய் முடியாய்! தெய்வநாயகனே! எனக்கு ஆறு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக்குக் கைம்மாறு
ஒன்று இலேன்; எனது ஆவியும் உனதே என்க. ஆறு - வழி. சரண் - உபாயம். தந்தொழிந்தாய் -
ஒருசொல்.
ஈடு :- பத்தாம்
பாட்டு. 1“அருளாய் உய்யுமாறு எனக்கு” என்றார், அப்போதே வந்து அருளக் கண்டிலர்;
ஏதேனும் நிலையிலும் ‘உன் திருவடிகளே சரணம்” என்றிருக்கும்படி என்னைச் செய்தருளின மகோபகாரத்துக்குப்
பிரதி உபகாரம் இல்லை என்கிறார்.
ஆறு எனக்கு நின்பாதமே
சரணாகத் தந்தொழிந்தாய் - உபாய உபேயங்கள் இரண்டும் உன் திருவடிகளேயாம்படி
____________________________________________________
1. இந்தப்
பாசுரத்திலும் சந்தோஷம்போலே இருந்ததேயாகிலும், இடத்திற்குத்
தகுதியாக அநவாப்திதோற்ற
அவதாரிகை அருளிச்செய்கிறார். இதற்கு,
“உனக்கோர் கைம்மாறு நான் ஒன்றிலேன்” என்றதிலே நோக்கு.
|