முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
323

என

என்று தொடங்கி, வேறு உபாயம் இன்மையை முன்னிட்டுக்கொண்டு உபாயத்தை அறுதியிடுகிற திருவாய்மொழி ஆகையாலே அதனையே நிகமிக்கிறது.

    ‘நின்பாதமே’
என்ற ஏகாரத்தாலே 1ஏகபதத்தை நினைக்கிறது. 2ஈச்வரனைப் பற்றின ஊற்றத்தாலே வேறு உபாயங்களை நெகிழுகை ஒழிய, நாஸ்திக்யத்தாலே விடுமன்று அது வேறு விஷயங்களிலே ஈடுபாட்டிற்குக் காரணமாம். 3மருந்தினையுண்டவன் ஒரு பாம்பின் வாயிலே கையினைக் கொடுத்தால் அது தீங்கினை விளையாதாம், மருந்து இல்லாதவன் அதனைச் செய்தால் அது மரணத்திற்குக் காரணமாம். இந்தத் தெளிவினைப் பிறப்பித்த உனக்கு ஒத்ததான பிரதியுபகாரம் காணாத மாத்திரம் அன்றிக்கே, கைம்முதல் இல்லாத நான் 4போலியாயிருப்பது ஒரு பிரதியுபகாரமும் காண்கின்றிலேன். ஏன் வருந்துகிறீர், உம்முடைய ஆத்மாவைத் தந்தாலோ? என்ன, எனது ஆவியும் உனதே - அதுவும் செய்து நெஞ்சாறல் கெட்டிருப்பன் அன்றோ, நீ மயர்வற மதிநலம் அருளிற்றிலையாகில். ஆத்ம சமர்ப்பணம் செய்கையாவது, 5இராஜமகேந்திரன் படியை எடுத்து ‘என்னது’ என்று கொண்டு பெருமாளுக்குக் கொடுப்பாரைப் போன்று களவு வெளிப்படுதலே அன்றோ. “சரண்-திருவடிகளை; ஆறாக எனக்குத் தந்தொழிந்தாய்; நின் பாதமே, எனது ஆவியும் உனதே” என்று கூட்டி

___________________________________________________

1. ‘ஏகபதத்தை நினைக்கிறது’ என்றது, பற்றுமிடத்தில் உபாய பாவத்தைக்
  கழிக்கிற ஏகபதத்தில் அர்த்தத்தை நினைக்கிறது என்றபடி. ‘ஏகபதம்’
  என்றது, சரமஸ்லோகத்திலுள்ள “ஏகம்” என்ற பதத்தைக் குறித்தபடி.
  அங்கு “மாம் ஏகம்” என்பதற்கு ‘என்னையே’ என்பது பொருள். “ஏகம்”
  என்ற சொல் ஏகாரத்தின் பொருளில் வந்துள்ளது.

2. ஆயின், நித்திய நைமித்திக கர்மங்களை விட்டொழித்தல் ஆகுமோ?
  எனின், அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘ஈச்வரனைப் பற்றின’ என்று
  தொடங்கி.

3. மேலதற்கு ஒரு திருஷ்டாந்தம் காட்டுகிறார் ‘மருந்தினையுண்டவன்’ என்று
  தொடங்கி.

4. “ஓர் கைம்மாறு” என்றதற்கு, பொருள் அருளிச்செய்கிறார்
  ‘போலியாயிருப்பதொரு’ என்று தொடங்கி.

5. ‘இராஜமகேந்திரன் படி’ என்றது, நம் பெருமாள் திருமார்பில்
  அணிந்துகொள்ளும் ஒரு பதக்கம்.