|
New Page 1
‘நின் பாதமே’
என்பதனைச் சபதமாக்கி நிர்வஹிப்பர்
ஆப்பான் திருவழுந்தூர் அரையர்.
சேறுகொள்
கரும்பும் பெரும்செந்நெலும் மலி தண்சிரீவர மங்கை - மிக்க சேற்றையுடைத்தான கரும்பும், அதற்கு
நிழல் செய்யும்படியான செந்நெலும் மிக்குக் குளிர்ந்த சிரீவர மங்கை. நாறு பூந் தண் துழாய்
முடியாய்-1இதற்கெல்லாம் முதலியாக வைத்த வளையத்தையுடையையாய். தெய்வ நாயகனே-நித்தியசூரிகளுக்கு
அதிபதியானவனே! தெய்வம்-தேவர்கள். எத்தனையேனும் ஞானமுடையார்க்கும் நிர்வாஹகனாயிரா நின்றாய்,
ஆனபின்னர் நான் உனக்கு என்ன பிரதியுபகாரம் பண்ணுவது. 2நீயோ கனக்க உபகரித்துக்கொண்டு
நின்றாய், நான் அறிவிலனாகப் பெற்றிலேன், இங்ஙனேயானாலும் நான் சில செய்து தலைக்கட்டினேனாக
ஒண்ணாதபடி நீ பரிபூர்ணனானாய். 3உபகாரம் கொள்ளாதார் உண்டு உடுத்துத் திரியா நின்றார்கள்,
அறிவு கேடரானவர்கள் ‘சில பிரதியுபகாரம் செய்தோம்’ என்றிரா நின்றார்கள்; நீ நிறைவில்லாதவனாகில்
இவை எல்லாம் சில செய்தனவாக நினைத்திருக்கலாமே அன்றோ, நீயோ நிறைந்தவனாயிரா நின்றாய்;
ஆனபின்னர், ஒன்று செய்து தலைக்கட்டப் போமோ.
(10)
_____________________________________________________
1. “தெய்வ நாயகனே” என்றதனைக்
கடாக்ஷித்து, பாவம் அருளிச்செய்கிறார்
‘இதற்கெல்லாம்’ என்று தொடங்கி. இதற்கெல்லாம் - இந்தப்
பூமிக்கெல்லாம். “தெய்வ நாயகன்” என்றது, லீலாவிபூதிக்கும் உப லக்ஷணம்.
2. பாசுரம் முழுதினையும் கடாக்ஷித்துக்
கருத்து அருளிச்செய்கிறார் ‘நீயோ’
என்று தொடங்கி. “ஆறு எனக்கு நின்பாதமே சரணாகத் தந்து
ஒழிந்தாய்”
என்றதனைத் திருவுள்ளம்பற்றிக் ‘கனக்க உபகரித்துக் கொண்டு நின்றாய்’
என்கிறார்.
“எனதாவியும் உனதே’ என்றதனைத் திருவுள்ளம்பற்றி “நான்
அறிவிலனாகப் பெற்றிலேன்” என்கிறார்.
“தெய்வ நாயகன்” என்றதனைத்
திருவுள்ளம்பற்றி ‘நீ பரிபூர்ணனானாய்’ என்கிறார்.
3. “நீயோ கனக்க” என்று தொடங்கி, மேற்கூறியவற்றையெல்லாம் தொகுத்து
எதிர்மறைமுகத்தால் அருளிச்செய்கிறார்
‘உபகாரம் கொள்ளாதார்’ என்று
தொடங்கி. ‘அறிவுகேடரானவர்கள்’ என்றது, மயர்வற மதிநலம்
அருளப்
பெறாமல் தாமாகவே ஈச்வரனைப் பற்றினவர்களைக் குறித்தபடி.
|