|
519
519
தெய்வநாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக்
கொய்கொள் பூம்பொழில்சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்கஆயி ரத்துள் ளிவைதண் சிரீவர மங்கை மேய பத்துடன்
வைகல் பாடவல்லார் வானோர்க்கு ஆராவமுதே.
பொ-ரை :-
நித்தியசூரிகளுக்குத் தலைவனும் நாராயணனும் திரி விக்கிரமனுமான
சர்வேச்வரனுடைய திருவடிகளின்மேலே, பறித்துக் கொள்ளப்படுகின்ற பூக்களையுடைய சோலைகள் சூழ்ந்த
திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபர் அருளிச்செய்த ஆயிரம் திருப்பாசுரங்களுள், குளிர்ந்த
ஸ்ரீவரமங்கை என்னும் திவ்விய தேசத்தைப் பற்றிய இவை பத்துப் பாசுரங்களையும் அர்த்த ஞானத்தோடு
பாட வல்லவர்கள் நித்தியசூரிகளுக்கு எப்பொழுதும் தெவிட்டாத அமுதத்தைப் போன்றவராவர்.
வி-கு :- ஆயிரத்துள் தண் சிரீவரமங்கை மேய
இவை பத்தையும் உடன் பாட வல்லார் வானோர்க்கு வைகல் ஆராவமுது என்க. வைகல்-நாள்.
ஈடு :- முடிவில், 1இத்திருவாய்மொழியைப்
பொருள் அறிவோடு கற்குமவர்கள், நித்தியசூரிகளுக்கு என்றும் இனிய பொருளாவர் என்கிறார்.
தெய்வநாயகன் - சர்வேச்வரன். நாரணன் - தன்னுடைமை
இழக்கவிடாத வத்சலன். திரிவிக்கிரமன் - தன்னை இரந்தார்க்குத் தன்னை அழிய மாறியும் காரியத்தைச்
செய்து தலைக்கட்டிக் கொடுக்குமவன். அடி இணைமிசை - திருவடிகளிலே. கொய்கொள் பூம்பொழில் -
நித்திய வசந்தமான சோலை என்றது, எப்போதும் கொய்கைக்குப் பக்குவமாயிருக்கை. குருகூர்ச்
சடகோபன் - 2ஸ்ரீகீதையில் வேறுபாடு. செய்த
____________________________________________________
1. “உடன் பாடவல்லார் வானோர்க்கு ஆராவமுதே” என்றதனைக்
கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2.
‘ஸ்ரீகீதையில் வேறுபாடு’ என்றது, தத்துவப் பொருளாயிருக்கின்ற
சர்வேச்வரன் அருளிச்செய்த
ஸ்ரீகீதையைக்காட்டிலும், தத்துவங்களை
அறிந்த சதுர்மறைப் புரோகிதருடைய வசனங்களாகையாலே இவை
விலக்ஷணம்
என்றபடி.
|