முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
33

கட

கடலுள் நின்று நான் துளங்க-கொந்தளிப்பையுடைய கடலுக்குள்ளே அழுந்துகிற நாவாய் போலே, பிறவிப் பெருங்கடலிலே நின்று நான் நடுங்க. ‘நாவாய் போல்’ என்கிற இடத்தில், நாவாய் மாத்திரத்தை நினைத்தபோது, ‘ஆவார் ஆர் துணை’ என்றதனைக் கரையிலே நின்றவர்களுடைய வார்த்தை ஆக்குக. 1அதற்குக் கருத்து, நோவுபடாநிற்கவும் உணர்த்தி அற்று இருந்தபடியைத் தெரிவித்தபடி. நடுங்குகையாவது, அசைந்து வருகை. அன்றிக்கே, ‘நாவாய் போல்’ என்பதனைக் ‘கட்டில் கத்துகிறது’ என்பது போன்று ஆகுபெயராகக் கொண்டு, ‘நாவாய்’ என்பதற்கு, நாவாயிலே இருக்கின்ற மக்கள் என்று பொருள் கோடலுமாம். இவ்விதமான நடுக்கத்தில் சர்வேசுவரன் செய்தது என்? என்னில், தேவார் கோலத்தொடும் திருச்சக்கரம் சங்கினொடும் ஆஆ என்று அருள்செய்து அடியேனொடும் ஆனானே-2பிரகிருதி சம்பந்தம் இல்லாத திவ்விய உறுப்புகளோடும் அவ்வுறுப்புக்களில் சேர்ந்த திவ்விய ஆயுதங்களோடுங்கூட வந்து, ஐயோ! ஐயோ! என்று என் பக்கலிலே கிருபையைச் செய்து என்னோடே வந்து கலந்தான்.

    பின் இரண்டு அடிகட்கு, 3“கையில் ஆழ்வார்களோடு பொருந்தினாற்போலே என்னோடே வந்து கலந்தான்” என்று

_____________________________________________________

1. ‘அதற்குக் கருத்து’ என்றது, கரையிலுள்ளார் ‘இதற்குத் துணை ஆவார் யார்’
  என்று நோவுபட வேண்டும்படி அசேதனமான நாவாய் போல் என்றதற்குக்
  கருத்து என்? என்றபடி. கரையிலே உள்ளார் வார்த்தை ஆக்குகின்ற
  காலத்தில் தம்முடைய நிலையைத் தாம் சொல்ல மாட்டாமையைக்
  கருத்தாகக் கொள்க. அசேதனத்துக்குத் “துளக்கம்” எது? என்ன,
  ‘நடுங்குகையாவது, அசைந்து வருகை’ என்று அதற்கு விடை
  அருளிச்செய்கிறார். கப்பலிலே உள்ள மக்களைச் சொல்லும் போது
  “துளக்கம்” என்றது, மன நடுக்கத்தை.

2. பின் இரண்டு அடிகட்கு இரு வகையான நிர்வாஹங்கள்: எம் பெருமானார்
  நிர்வாகத்திலே நோக்காகப் பொருள் அருளிச்செய்கிறார் ‘பிரகிருதி’ என்று
  தொடங்கி.

3. அப்ராகிருதமாய் அழகியதான திருமேனியோடே திருவாழியோடும்
  ஸ்ரீ பாஞ்ச சன்னியத்தோடும் பொருந்தினாற்போலே, அப்ராகிருத
  விக்கிரகத்தோடே என்னோடே வந்து கலந்தான் என்பது, ஸ்ரீ
  ஆளவந்தாருடைய திருவுள்ளக் கருத்து. “அடியேனொடும்” என்ற
  உம்மையாலே, கையில் ஆழ்வார்களோடு சேர்ந்தார்போலே என்னோடும்
  சேர்ந்தான் என்றபடி. “கோலத்தோடும்” என்ற உம்மை, அசை நிலை.