|
புண
புண்பாடும், தாயைக்கொண்டு
இராச்சியத்தை வாங்கிப் பெருமாளைக் காடேறப் போகவிட்டான்’ என்று நாட்டார் சீறுபாறு என்றிருப்பார்கள்”
என்றத்தாலே வந்ததொரு அச்சத்தையுமுடையவனாய்க்கொண்டு; நான் திருவடிகளிலே சென்று கிட்டினால்,
உடன் பிறந்தவன் அல்லனோ! சிஷ்யன் அல்லனோ! தாசன் அல்லனோ! என்பக்கல் மலர்ந்த முகத்தராய்த்
திருஅருள் செய்யாதொழிவரோ! என்று பார்த்து; அம்பு எய்வார் படை திரட்டிக்கொண்டு போமாறு
போல, திருவயோத்தியிலுள்ளாரில் மரங்கள் அகப்பட ஆர்த்தியில் தன்னில் குறைந்த பொருள்கள்
இல்லை அன்றே, நம் ஆர்த்தி கண்டு மீண்டிலராகிலும் ஆர்த்தர் பலரையும் கண்டால் மீளாமை இல்லை
என்று பார்த்து 1“இந்த மந்திரிமார்களோடுங்கூட என்னால் தலையால் வணங்கி
யாசிக்கப்பட்ட தேவரீர், பின் பிறந்தவனும் சிஷ்யனும் தாசனுமான அடியேனுக்குத் திருவருள செய்ய
வேண்டும்” என்கிறபடியே, இவன் செல்ல; பெருமாளும் “இராச்சிய தந்திரங்களில் குறைவுபடாமல் நடத்தாநின்றாயே?
காரியங்கள் செய்யுமிடத்தில் மந்திரிகளோடு கூடிச் செய்யா நின்றாயே? என்பன போலே இவனுக்கு
இடம் அற வார்த்தைகள் கேட்டாற்போலே; இவர் அடைந்த இடத்தில் 2திருக்கண்களை
அலர விழித்துக் குளிர நோக்கியருளுதல், திருப்பவளத்தைத் திறந்து ஒரு வார்த்தை அருளிச்செய்தல்,
அணைத்தல் செய்யக்கண்டிலர். 3“அந்தக் கிருஷ்ணன், என்னை அக்ரூரனே!
___________________________________________________
மைக்கும் உதாஹரணம் காட்டுகிறார்
‘ஸ்ரீபரதாழ்வான்’ என்று தொடங்கி.
1. “ஏபிஸ்ச ஸசிவை:
ஸார்த்தம் ஸிரஸா யாசிதோ மயா
பிராது: ஸிஷ்யஸ்ய
தாஸஸ்ய ப்ரஸாதம் கர்துமர்ஹஸி”
என்பது, ஸ்ரீராமா. அயோத். 101 :
12.
2. “கிடந்தாய் கண்டேனே”
என்றதனைக் கடாக்ஷித்துத் ‘திருக்கண்களை
அலர விழித்து’ என்றது முதல், ‘அணைத்தல் செய்யக் கண்டிலர்’
என்றது
முடிய அருளிச்செய்கிறார்.
3. ‘அடியார்கட்காக எழுந்தருளியிருக்குமவன்
நம் காரியம் செய்யாமை
இல்லை’ என்று அவனுடைய ஸ்வபாவத்தை அநுசந்தித்துக் ‘கிடைக்கும்’
என்று
சென்றீரேயாகிலும், உமக்குக்கிடைக்குமோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘அந்தக்
கிருஷ்ணன்’ என்று தொடங்கி.
“ய: அநந்த: ப்ருதிவீம்
தத்தே ஸேகரஸ்திதி ஸம்ஸ்திதாம்
ஸ: அவதீர்ணோ ஜகத்யர்த்தே
மாம் அக்ரூரேதி வக்ஷ்யதி”
என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 5.
17 : 12.
|